Tuesday, February 28, 2012

ஆ..பாசங்கள்....

பண்பாட்டின் பிறப்பிடம் ...
பயணிக்கிறது பயந்து கொண்டே ...
மறைத்து வைக்கப்பட்ட மானம்
மறைவாய் திரையிட படுகிறது ..!!!

ஒழுக்கத்தின் உறைவிடம்
ஒன்றாம் வகுப்பறையிலேயே
ஒழித்து வைக்கபடுகிறது
ஒ... முன்னேற்ற முதற் படி !!!!

கல்வியின் கலங்கரை க்கு
கட்டும் சமாதி யுத்திகளை
கற்கும் கல்வி கூடங்களில்
காண்கிறோமே .. காட்சிகளை!!!

திறந்த வழி படிப்பு
பல்கலை கழகங்களில் மட்டுமல்ல
சிறந்த வகை மொபைல் (கைபேசி ) கூட
எல்லா படிப்பு பிரிவுகளும்
கற்பித்து கொடுக்கிறது (ஆபாசங்களை) !!!

காதல் என்பது கட்டாய பாடம்
கல்வி என்பது விருப்ப பாடம்
கல்லூரி வளாகங்களில் ..
பீச்சுகள் சீ ...சீ ... ஆனது
பூங்காக்கள் ... பொலிவிழந்தது


நண்பேண்டா...அவன்தான்
கணிபொறி ..இன்டெர் நெட்
காமாட்சி ...யினை காண
கணி பொறி தேடலில்
கா..என்று தட்டும் நொடியில்
கா .யில் ஆரம்பிக்கும்
காம படங்கள் ...காம கதைகள்
என்று.. தானே காண்பிக்கும்
கணிபொறி நண்பன் ..

எத்தனை அறிவியல்
என்ன என்ன கண்டு பிடித்தாலும்
அதில் காண கூடாததை
தேடி கொண்டிருக்கும்
கடமை உள்ள மாணவர்கள் ...

புத்தகம் தவிர அனைத்தையும்
சுமக்கும் மாணவர்கள் ..
புத்தகம் தவிர அனைத்தையும்
இழக்கும் மாணவிகள்...
மதிப்பெண் குறைந்தால்
மரணம் தேடும் ஒரு கூட்டம்..

திருமணம் இன்றும்
சொர்க்கத்தில் தான்
நிச்சயிக்க படுகிறது
ஆனால் அதற்க்கு முன்
சில இடங்களில்
ஒத்திகை நடை பெறுகிறது ...

பரிதவிக்கும் பாச பெற்றோர்
அண்ணார்ந்து பார்க்கும் ஆசிரியர்கள்
கவலையில் காணும் காவலர்கள்
எல்லோரும் இப்படி இருக்க
இன்னுமாய் தொடர்கிறது ..
பண்பாட்டின் பிறப்பிடம் ...
பயணிக்கிறது பயந்து கொண்டே ...


Sunday, February 26, 2012

பழையபடி....

உன் பிரியம் மட்டும்
பழையபடி என்மீது....!
வேண்டாமே உன்
அன்பும் பாசமும்...புதிதாய்
எதுவும்
எனக்கு வேண்டாம்...!
மறுபடி தலை குனிய
மாட்டேன்...!

Thursday, February 23, 2012

நான் கோடீஸ்வரனாக உன் காதல் காரணமாகட்டும்

அன்பே
என் காதலை வெறுததை
மனபூர்வமாக ஏற்கிறேன்
எனக்காக ஒன்றை மட்டும்
திருப்பி கொடு
உனக்காக வீணான நிமிடங்களையும்
உனக்காக செலவழித்த பணங்களையும்
நானும் இருப்பேன் கோடீஸ்வரனாக்
கல்லறை உருவாக்கும் காதலின் நடுவில்
ஒரு கோடீஸ்வரனாக் உருவாக்கிய
காதலாய் விட்டு சென்ற நம் காதல் இருக்கட்டும்

முதல் கவிதை

கவிதை எழுத முயற்சித்தேன்
பல வார்த்தைகள் கிடைத்தும்
மனதில் ஒரு தயக்கம்!

எதை பற்றி எழுதுவது,
நட்பு,காதல்,இயற்கை என மாறி மாறி
மனம் குழம்பிக்கொண்டிருக்க,
பேனா மையில் ஈரம் காய்ந்தது
வார்த்தை வரவில்லை!

சில நேர நிசப்தம்,இறுதியில்
என் கை எதையோ எழுதத்தொடங்கியது!
பின்னர் பார்த்தேன் கண்களில் ஈரம்,
அந்த வார்த்தை அம்மா!!!!


Tuesday, February 21, 2012

காதல் கொடிது....காதல் கொடிது.....

காதல் கொடிது....காதல் கொடிது.....
கற்பனை செய்தே காலம் கழியும்.....
காதல் கொடிது....காதல் கொடிது.....

விரதம் தின்னும்....விரக்தியும் தின்னும்.....
விதையும் தின்னும்....விந்தையும் தின்னும்.....

உன்னையும் தின்னும்....என்னையும் தின்னும்....
இந்த மண்ணை போல...
உன்னையும் தின்னும்....என்னையும் தின்னும்....

விண்ணும் மண்ணும் விரல் தொட்டாலும்....
விழியில் விண்மீன் ஒளி பட்டாலும்......

நெஞ்சம் உன்னை தேடுமடி....
உன்னை கொஞ்சி கொஞ்சி பாடுமடி.....

கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன்...
உன் கனவு மட்டும் போதுமடி....
அது தினமும் தினமும் வேண்டுமடி......

கனவில் தினமும் நீ வந்தால் போதும்....
என் காயம் யாவும் ஆறுமடி....
என் காயம் யாவும் ஆறுமடி
....

Monday, February 20, 2012

ஓர் காதலின் மன்னிப்பு கடிதம்,,,,

கவலைகளும் ஏமாற்றங்களும்
என்னை சூழ்ந்து கொண்டதால்
கண்ணீரோடு கலந்து கொண்டிருக்கிறேன்
என் கவிதை வரிகளில்
உனக்காக நான் எழுதும்
என் காதலின் மன்னிப்பு கடிதத்தை

முறிந்து விட்டது என்று
நம் காதலை முறித்துவிட்டு போய்விட்டாய்
முறிந்து விழுந்தவனாக
இன்னும் தத்தளித்து கொண்டிருக்கிறேன்
இன்னும் உன் நினைவுகளால்

நம் காதலில் நான் செய்த பிழை என்னவென்று
இன்று வரை எனக்கு தெரியவில்லை
உனக்கு தெரிந்தால்
எனக்கு பதில் அனுப்பு

உன் வீட்டு தெருமுனைகளை
கடக்கும் போதெல்லாம்
என் கண்களை உன் வீட்டோரம்
விட்டு செல்கிறேன்
உன்னை கண்டுவிடாதோ
என்ற நம்பிக்கையில்

என்னால் உனக்கு என்ன நேர்ந்தது,,,,சொல்லிவிடு
களங்கமற்ற தூய்மையான காதல் தானே
நம் காதல்
என் விரல் நகம் கூட உன் மீது பட்டதில்லையே
கண் அசைவுகளாலும்
ஊமை புன்னகையோடுதானே
நம் காதலை பரிமாறிக்கொண்டோம்

உன்னிடம் பேசகூட தயக்க படுபவன்
இன்று உன்னிடம் தயக்கமின்றி
மண்டி இடுகிறேன்
என் காதலில் பிழை ஏதும் இருந்தால்
என்னை மன்னித்து விடு

இந்த உலகத்தில் என்னை
அதிகமாக நேசித்த ஜீவன் நீ,,,,
இன்று என்னை அதிகமாக வெறுக்க
என்ன காரணம்

இவன் எதுக்கும் லாயக்கில்லாதவன்
என்று சொன்னவர்கள் மத்தியில்
என்னையும் என் வாழ்க்கை முறைகளையும்
மாற்றிய தேவதை நீ,,,,
மற்றவர்கள் மதிக்கும் படி மாற்றியதும் நீ,,,,

என் வாழ்க்கை முறையில் என்னை
வெற்றியாளனாய் மாற்றிய உன்னை எப்படி மறப்பேன்
சொல் தேவதையே

உன்னை மட்டுமே
நினைத்து வாழ பழகிவிட்டேன்
உன்னை மட்டுமே நினைத்து வாழ்வதுகூட
உனக்கு கடினமாக தோன்றினால்

என்னை மன்னித்து விடு,,,,

நான் இன்றும் உன்னை நினைத்தே வாழ்ந்து கொண்டிருப்பதால்,,,,

இப்படிக்கு,,,,,,,,,,,,,,உன்னவன்

Wednesday, February 1, 2012

உன்னிடம் கேட்பேன் ஒன்று!.....

ஓ தென்றலே! நீ
சொல்லிவிடு! உன்
வசந்தத்தின் வாசத்தை!
ஓ மேகமே! நீ
சொல்லிவிடு உன்
கருங்கூந்தல் ரகசியத்தை!
ஓ நதியே! நீ
சொல்லிவிடு! யாரை
காதலிக்க இப்படி ஓடுகிறாய் என்று!
ஓ மயிலே! நீ
சொல்லிவிடு! யாரை
மயக்க இந்த வண்ணங்கள் என்று?
ஓ மானே! நீ
சொல்லிவிடு! உன் கண்களை
எனக்கு தானமாய் தந்து விடுவாயா என்று!
இந்த ரகசியத்தையெல்லாம் சொன்னால் !
அழகாக்குவேன் உங்களை எல்லாம் விட!
என் காதலியை!!!