Tuesday, January 31, 2012

மரண வலி புரிந்தது......

மரண வலி தெரியாது....
புரிந்தது..
மரண வலி
இப்படிதான் இருக்கும் என்று...
நீ எனை விட்டு
பிரிந்து சென்ற நாட்கள்....

ஏதோ ஒரு மழைநாளில்
உன் ஞாபங்களை
கண்ணீரால் தொலைத்த கையோடு
வானம் போலவே வாழ்வை
வெறுமையாய் களிக்கிறேன்..
வாசித்து எழுதுபவருக்கு மத்தியில்
உன்னை யோசித்து
எழுதிய கவிதைகளை
தீக்கிரையாக்கி குளிர்காய்கிறேன்..
எல்லாம் கொடுத்து விட்டேன்..
கொடுக்காமலே வைத்து கொண்டேன்..
கோபம் மட்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் அதையும்
நீயே களவாடிக் கொள்ள
உன்னை விட்டு செல்கிறேன்..
இன்னும் தூரமாய்....

Thursday, January 26, 2012

காதலித்த நாட்களில்

நான் உண்ணக் காதலித்த
நாள் முதலாய் இருந்து
என்னை உனக்குப்
பிடிக்கவில்லை என்கிறாய்!

"நான் எப்படி இருந்தால்
உனக்குப் பிடிக்கும்...???"
என்று கேட்டேன்...

"நீ புகைபிடிக்கிறாய்
விட்டுவிடு" என்றாய்.

விட்டுவிட்டேன்.

"உன் நண்பர்கள் சரியில்லை
விட்டுவிடு" என்றாய்.

விட்டுவிட்டேன்.

உனக்காக நான்
இவ்வளவு செய்தும்
திரும்பவும் எனனைப்
பிடிக்கவில்லை என்கிறாய்!

காரணம் கேட்டதற்கு
"விட்டுவிடு, விட்டுவிடு...
என்று சொன்னதெல்லாம்
உனது பழக்கங்களையல்ல
'என்னை விட்டுவிடு'
என்றல்லவா
கூறினேன்"
என்று சொல்லிவிட்டு
சென்றுவிட்டாய்...

இனி நான் அந்த
நண்பர்களைத் தேடி
எங்கே போவேன்...???


Sunday, January 15, 2012

மறந்து விட்டாயே எப்போதும் போல்..

காதல் எனும் வார்த்தை
எனக்கு கவிதை எழுதிட மட்டும் தான் சாத்தியமானதே..

தோள் சாய்ந்த உன் நேசம்
தொடர்பு எல்லைக்கு வெளியில் போனதே..

புன்னகையால் சிகரம் ஏற்றினாய்...
உன் புன்னகை கண்டதற்கா
என்னை சிதையில் வாட்டினாய்..

கவிதைகள் கேட்டு கண் சிமிட்டினாய்..
கவிதை சொன்னதற்கா
என் காதலை கழுவில் ஏற்றினாய்..

அறுந்து போன பட்டமாய்
மனம் பிடி தேட அலைகிறது
எவரோடும் சிக்க மறுத்து
உன் இதயம் தேடியே பறக்கிறது..

வேறு துணை கண்டு
வாழச் சொல்கிறாய் உன் போல்..

உயிர் உன்னோடு நீ
பறித்து சென்றதை
மறந்து விட்டாயே எப்போதும் போல்..


Wednesday, January 11, 2012

காதலில் நிஜம் எதுவென நான் கேட்டேன் 
கண்கள் என்றாள் என்னவள் 
காதலில் சுகம் எதுவென நான் கேட்டேன் 
உனக்காக காத்திருக்கும் மனம் 
என்றாள் என்னவள் 
காதலில் வரம் எதுவென நான் கேட்டேன் 
உன் காதல் என்றாள் என்னவள் 
காதலில் பிரிவு எதுவென நான் கேட்டேன் 
பிரிவே இல்லை என்றாள் என்னவள் 
காதலில் சோகம் எதுவென நான் கேட்டேன் 
எனக்கு முன்னே உன் மரணம் என்றாள் 
என்னவள் 
காதலின் குழந்தை எதுவென நான் கேட்டேன் 
கவிதை என்றாள் என்னவள் 
காதலின் நிழல் எதுவென நான் கேட்டேன் 
உன் காலடி சுவடுகள் என்றாள் என்னவள் 
காதலில் பெரிய ரணம் எதுவென நான் கேட்டேன் 
உன் மரணம் எனக்கும் என் மரணம் உனக்கும் 
என்றாள் என்னவள் 
காதலில் எதிரி எதுவென நான் கேட்டேன் 
நாம் தான் என்றாள் என்னவள் 
காதலில் உயிர் எதுவென நான் கேட்டேன் 
என்னில் நீ உன்னில் நான் என்றாள் என்னவள்

காதலித்தேன்

இதயத்தை காதலித்தேன்,
அது மூச்சொடு சென்றது,
உயிரை காதலித்தேன்,
அது காற்றோடு சென்றது,
அன்பை காதலித்தேன்,
அது காதலோடு சென்றது,
காதலை காதலித்தேன்,
அது அவளிடம் சென்றது,
அவளை அல்லவா காதலித்தேன்,
அது அவளது திருமணத்தில் சென்றது,
நான் யாரை காதலிப்பது’
என் உயிரை அல்லவா காதலித்தேன்,
உடல் இல்லாமல்
கல்லறையில் சென்றது .........


Sunday, January 8, 2012

காதலின் வகைகள் தெரிஞ்சுக்க ரெடியா

எத்தனை ஜாதிகள் நம் நாட்டில்
குறைவுதான் நிச்சயம் சொல்வேன்
அதையும் தாண்டிவிட்டது
எங்கள் காதலின் வகைகள்
பார்த்த காதல்
பார்க்காமலே காதல்
சொல்லி காதல்
சொல்லாமலே காதல்
ஊர் சுற்றும் காதல்
உண்மையான காதல்
உரிமையான காதல்
தைரியமான காதல்
தில்லாலங்கடி காதல்
திருட்டு காதல்
கள்ள காதல்
கடுதாசி காதல்
குறுஞ்செய்தி காதல்
செல்போன் காதல்
வலைதள காதல்
விலைமாதர் காதல்
வேலைகாரி காதல்
சினிமா காதல்
கவிதை காதல்
காவிய காதல்
இருங்கப்பா கொஞ்சம் மூச்சு விட்டுக்கிறேன்
இன்னும் இருக்கு சொல்லனுமா
போதும் போதும் காதல்
போதாது என உருகும் மனமே
கைவிடாது கைபிடிப்பதே உண்மையான
காதலடா .....................

அன்னையே

அன்பின் வடிவே – உன் 
அகத்தில் பாச ஊற்றோ? 
நெஞ்சம் நிறை இன்பம் தந்து 
நெகிழ வைப்பாய் நீயே 
உறவென்ற வலைக்குள் - எனை 
உதிப்பித்தவள் நீயே 
உயிர் உருவமாய் கண்டுகொண்டேன் 
உண்மைத் தெய்வமாய் உனையே 

வான நிலாக்காட்டி சோறு ஊட்டி 
வாழ்வில் வழி காட்டி 
துணை நின்று என்னோடு 
துன்பம் விலக துணை புரிவாய் 

எக் காரியம் தொடங்க முதல் 
என் அன்னையே உனை தொழுதால் 
முன்னின்று காரியத்தில் 
முழுதாய் வெற்றி தந்திடுவாய் 

பாசத்தின் உறைவிடமே 
பணிகிறேன் உனையே அன்னையே
 

Saturday, January 7, 2012

நீ தானே கற்றுத்தந்தாய்...

நான் வாங்கும் புது பேனா கூட...
முதலில் உன் பெயரை தானே...
"எழுதி" மகிழ்கிறது..!

நான் அடையும் வெற்றிகள் கூட...
முதலில் உன் காதில் விழ வேண்டும்...
என்று தானே தவமிருக்கின்றன..!

கனவுகளே காணாத எனக்கு...
நீ தானே கனவுகளை காட்டினாய்..!

ஏங்கி ஏமாறுவதில் இருக்கும் சுகத்தை...
நீ தானே சொல்லி கொடுத்தாய்..!

நானாக பேசி நானாக சிரிக்கும்...
புதுக்கலையை நீ தானே கற்றுத்தந்தாய்..!

ஏனடி..?

உன் "பிரிவை" ஏற்க மட்டும்...
கற்று தர மறந்தாய்..!!


எனக்கு காதல் தேவை இல்லை

அன்பே
உன்னை பிரிவேன் என்றால் காதல்
தேவை இல்லை
மரணம் முடிவு என்றால் காதல்
தேவை இல்லை
தாயை பிரிய நேர்ந்தால் காதல்
தேவை இல்லை
உறவுகளை மறக்க நேர்ந்தால் காதல்
தேவை இல்லை
மனதார சொல்
இத்தனையும் இழந்து
எதை அடைய போகிறாய்
காதல் கொண்டு
என்றும் எனக்கு காதல் தேவை இல்லை