Monday, December 19, 2011

வாழ்க்கை

வாழ்க்கையை கவிதையாக
எழுதும் போது வரிகள்
என்னை சுமந்து செல்கின்றுது.
வாழ்க்கையெனும் புத்தகத்தில்
காலம் என்னை புரட்டுகிறது.
ஒவ்வொரு வயதும்
ஒவ்வொரு பக்கமாய்
அதில் எத்தனை எத்தனை
சோகங்கள் அதில் எத்தனை எத்தனை தாக்கங்கள் அந்த வாழ்க்கை பயணத்தில்.
இன்னமும் தொடர்கிறேன்
நாளைய என்ற ரகசியம் அறிவதரிக்கு
ஆனால் இன்றைய பணியை முடித்து


பெண்ணின் மனம்

 பெண்ணின் மனம்
அடிக்கடி மாறுவதுண்டா.......?
பெண்ணைப் பெற்ற அன்னை கூட
அடிக்கடி மாற்றுவதுண்டா......?

உன்னை நம்பி இங்கு நான்
வந்தது பாதி.....!
உன்னை எண்ணி உறங்காமல்
தவித்தது பாதி.....!

காதலுக்கு முற்றுப் புள்ளி
வைத்தவள் நீ........ தான்.
கடைசி வரை காத்திருப்பேன் என
வாக்களித்ததும் நீ........ தான்

உன்னை நம்பி........
உன்னை நம்பி........
ஊட்டி விட்டாய்
நஞ்சை நெஞ்சில்.

பூவைப் போல - உன்
மனசு பூத்திருந்தது.
கல்லைப் போல மாற்றி விட்டாய்
ஏன் தெரியல.......!

வாக்குப் போட்ட விதத்தில்
தவறு இருந்ததோ........!
வந்தவனைக் கண்டதும்
என்னை மறந்து விட்டதோ.......!

உன்னைக் கண்டு தாய் நினைவை
மறந்தது விட்டது ஒரு காலம்.
என்னைக் கண்டு நானே வெறுக்கும் நிலை
வந்தது விட்டது மறு காலம்...!!!


தேனைப் போல - உன்
வார்த்தை இனிமையானது.
தேளைப் போல மாற்றிவிட்டாய்
ஏன் தெரியல.......!

குறிப்புப் பார்த்த விதத்தில்
தவறு இருந்ததோ.......!
சுளை சுளையாய் பணத்தைக் கண்டதும்
என்னை மறந்து விட்டதோ.......!

உன்னைக் கண்ட நாள் முதல்
உற்று நோக்க வில்லை - வேறு
பெண்ணுடல்........
என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன்
தனிமையில்..........


Tuesday, December 13, 2011

கவிதை


கண்களால் விதைக்க பட்டு,
நினைவுகளால் நீருற்றி,
அறிவினால் அறுவடை செய்து,
வார்த்தையால் விற்கப்படுவது....
-கவிதை....


அம்மா

 என் வாடிய
முகம் கண்டு...
பதறி போகும் - நீ
சோத்துடன் பாசத்தையும்
சேர்த்து பிசைந்து
ஊட்டும் போது...

அமிர்தத்தின் "சுவை" கூட...
தோற்று போகும்
உன் கை "பக்குவம்" கண்டு!

நீ என் தலை கோதி...
புன்சிரிப்புடன்
உன் மடியில் என்னை...
தூங்க வைக்கும் போது...

சொர்க்கத்தின் "இன்பம்" கூட...
தோற்று போகும்
உன் தாய்மையின்...
"இன்பம்" கண்டு!

என் பயம் போக்க...
நீ என்னை அனைத்து
அரவணைக்கும் போது...

கடவுளின் "கருணை" கூட...
தோற்று போகும்
உன் தாய் பாசத்தின்...
"கருணை" கண்டு!


Monday, December 12, 2011

நினைக்க வைக்கமுடியும்

உன் மீது நான் கொண்ட காதலை
இறைவனிடம் கொண்டிருந்தால் எப்போதோ
எனக்கு மோச்சம் கிடைத்திருக்கும்


உனக்காய் எழுதிய கவிதைகளை
அச்சடித்திருந்தால் புதிய காவியம்
ஒன்று கிடைத்திருக்கும்


நீயோ....
காதலால் எனக்கு
அழகானாய்
கவிதையால் எனக்கு
நிலவானாய்


ஆனாலும்
நீ நினைத்த மாதிரியே என்
இதயத்தை ஒத்திகை மேடையாக்கி
உன் காதல் அபிநயங்களை அழகாய்
பழகிச் சென்று விட்டாய்


இதில் என்ன ஆச்சரியம் என்றால்
கொஞ்ச காலமெடுத்தாலும் ஆசிரியர்
இல்லமாலே நீ நீயாவே நடன
ஆசிரியையானதுதான்

மறப்பதா..?
உன்னையா...?
நானா..?
பேசாமல் என்னை நீ
செத்துப்போக சொல்லி
இருக்கலாம்

நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா..?


உன் மொழி எனக்குள்
மெளனமானாலும்
நீ
பிரியாமாய் பேசியதையும்
நீ
பிரியமின்றி பிரிந்ததையும்
கவிதையாய் கிறுக்கவைத்தே
என்னைக் கவிஞனாக்கிறது


உன் நினைவுகளில்
நீந்துவதற்கும்
மூழ்குவதற்கும்
என் கண்ணீர்தான்
கற்றுத்தந்தது.


எனக்கான உலகமாய் நீயிருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பிருந்தது
உண்மைதான்


அதுசரி...
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியும்


உண்மை அன்பினை நீ உணரும் வேளை........!!!

கவிதை சொல்லி
காதல் செய்து
காதலை எண்ணி
கண்ணீர் விட்ட காலம்
மாறி.......

அரட்டையடித்து
அலும்பு பண்ணி
தேதி குறித்து
திகட்டிவிடும்போது
கழற்றிவிட்டு செல்லும்
கலியுகம் இன்று......

காதல் என்பது
கண்ணாய் எண்ணி
இன்பம் கண்ட காலம்
மாறியின்று
இன்பம் மட்டும் கண்டுவிட
காதல் கொள்ளும்
கலியுகமிது......

போதும்
புரிந்திடு மானிடா
சிற்றின்பம் தாண்டியொரு
பேரின்பம் உண்டு
உண்மை அன்பினை நீ
உணரும் வேளை........

Saturday, December 10, 2011

வலியும், வேதனையும்

அடிக்கு அடி.
உதைக்கு உதை.
மேற்கூறிய தண்டனை
காதலுக்கும் வேண்டுகிறேன்...
காதலுக்கான காத்திருப்புகளையும்,
பதிலுக்கு ஏங்கிடும்
பரிதவிப்புகளையும் ,
தனிமையில் கொன்றிடும்
அவஸ்தைகளையும்,
நீயும் அனுபவிக்க வேண்டுமடி..
அப்போழுதாயின் தெரியும் அல்லவே
காதலனாய் நான் ஏற்றிருக்கும்
பாத்திரத்தின் வலியும், வேதனையும்....


Monday, December 5, 2011

மூடிய அவள் மனக்கதவை
தட்டினேன் திறக்கவில்லை . . .

உதடாகிய சன்னல் வழி
உச்சரிப்பும் வரவில்லை
உற்று கவனித்தவனாய்
''ஈஸ்வர்'' ஸ்டைல்லில் பேசத்துவங்கினேன் . . .

''பெண்ணே பேரழகே
பேரின்ப தாமரையே
கண்ணே கனியமுதே
கற்கண்டு சக்கரையே
மணக்கும் உன்னை
மணக்க நினைக்கும்
எனக்கும் உனக்கும்
பிணக்கு எதற்கு
விளக்கு எனக்கு ''

பேரின்ப தாமரை
பேசத்துவங்கினாள் . . .
உன்போல ஒருவனுக்கு - என்
மனக்கதவு திறந்துவைத்தேன் - அவன்
திறந்த வீட்டினுள்ளே தெருநாய் புகுந்ததுபோல்
தாலி தருவதாய் சொல்லி வேலி தாண்டியவன்
விருந்தை மட்டும் முடித்துக்கொண்டு
விருந்தாளி ஆகிவிட்டான் . . .

அது முதலாய் மூடிய - என்
மனக்கதவு திறக்கவில்லை இதுவரையில் . . .
இனிமேலும் அப்படியே
ஓடிவிடு இப்பொழுதே - என்று
சொல்லியவாய் மூடுமுன்னே
சென்றது என் கால் பின்னே . . .


(முக்கிய குறிப்பு : காதல் என்ற பெயரில் ஆண்களிடம் ஏமாறும் அப்பாவி பெண்களின் விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட கவிதை)


Thursday, December 1, 2011

எப்படி முடிகிறது உன் போன்ற சிலரால் ..

புதைக்கப்பட்ட வரலாற்று காதல் தோல்விகள்
உன் போன்றவர்களால் இன்னும்
விதைக்க படுவதேன்..

உன்னால் எனக்குள் வளர்க்கப் பட்ட
நேசம் வேர் கூட மிச்சமின்றி
பறிக்க பட்டதேன்..

விழியிடம் தோற்று வாங்கிய காதலை வலியோடு நினைந்து வாழ்வை
தொலைக்கத் தானா..

அன்று சொல்வதற்கு
தயங்கிய காதலை தான்
இன்று யாரிடமும்
சொல்ல முடியா ரணமானதேன்.

. நியாபகங்கள் சிறகு முளைப்பதை
தடுக்க முடியவில்லை..

உன் சிந்தனையை மனதிற்க்கோ
மறக்க தெரியவில்லை..

உன்னால் மட்டும் எல்லாம் முடிகின்றது..

பொய்மையை பூச்சூடி கொண்டதாளா..

கொன்று விட துடிக்கும்
கோபங்களைக் கூட
மிஞ்சுகிற நேசத்தை
எப்படி மறக்க முடிகின்றது..

உன் போன்ற சிலரால்..


என் வலிகளை கூட நீ ரசிக்க

அன்பே

என் வலிகளை கூட நீ ரசிக்க

கவிதைகள் வடித்து வைத்தேன்

என்னை நீ முழுதும் படிக்க

கவிதைகளில் நிறைத்து வைத்தேன்

என்னை புரியவில்லை

என் கவிதைகள் வீண்தானே

இன்னும் உனக்கு புரிய

என் வலிகளை எப்படி சொல்ல