Wednesday, September 28, 2011

காதலில் தோற்றவர்கள்....

நம் பிரிவில்
உன்னை நானும்,
என்னை நீயும்,
குறை கூறிக்கொண்டு
என்ன பயன்.......!!

இவ்வுலகம்தான்
கூறிவிட்டதடி நம்மை
"இவர்கள் காதலில் தோற்றவர்கள்"
என்று......!


Thursday, September 22, 2011

"என் காதலியே முதல் குரு"

கல்லாத
கலையையும்
கற்கவைத்தாள்...
சொல்லாத
சொற்களையும்
சொல்லவைத்தாள்...
நினையாத
நினைவையும்
நினைக்கவைத்தாள்...
பேசாத மொழிகளையும்
பேசு என்று
பேசவைத்தாள்...
பாதம் படா
பாதையிலும்
பயனிக்கவைத்தாள்...
வெள்ளமுடியா
வெற்றியையும்
வெள்ளவைத்தாள்...
காணாத
கவலையையும்
காணவைத்தாள்...
வாழாத
வாழ்க்கையையும்
வாழவைத்தாள்...
வாழ்க்கை என்றால்
என்ன என்று
கற்றுத்தந்தாள்...
ஏன்.
ஏமாற்றத்தை கூட
நான் உணரவேண்டி
என்னை ஏமாற்றிசென்றவள்...
இப்பொழுதாவது சொல்லுங்கள்
என் முதல் குரு அவள் தானே...!

Sunday, September 18, 2011

முயற்சிக்கிறேன் கவிதை எழுத..,

நான் எழுதியவை அனைத்தும் வெறும்
வார்த்தைகள் தான்..,

என்றாவது ஒரு நாள் நீ
படிக்க நேர்ந்தால்..,!

ஒருவேளை அந்த வார்த்தைகளும் கவிதைகள்
ஆகலாம்..,


!!!கல்நெஞ்சுக்காரி!!!

அடியே கல்நெஞ்சுகாரி.....
உன் மௌனம்
உடைக்கப்படும்பொழுது
எனக்கு
சொல்லி அனுப்பு
உனக்காக
செலவு செய்த என்
காதலை
வட்டியும் முதலுமாய்
வசூலிக்க
காத்திருக்கிறேன்...!!!


Wednesday, September 14, 2011

MobileWallpapersPackNOV08

காதலியே நீ செத்தால் நன்று

காதலியே நீ செத்தால் நன்று
உன்னால் இதயம் பிடுன்கபட்டு இறந்த எனக்கு
உன் அழிவை பார்க்க ஆசை
நன் இப்போ உண்மை காதலன் அல்ல
நீ மட்டும் என்ன என் உண்மை காதலியா

மயக்கம் அடையவேண்டாம்

உனக்காக நான் எழுதும் இந்த பொன் காவியம் அழியாமல் உன் கண்களில் பார்த்து கொள்

தயவு கூர்ந்து அழுது விடாதே

இந்த காவியம் என் உயிர் வழி வந்தது ,
உன் விழியில் வழிந்து ஓட விடாதே அன்பே

மின் மினி பூச்சிகளை என் பேனா எழுதும் வரிசையில்
அமரவைத்து எழுதிய காவியம்

என் கண்ணீர் துளி , காகிதத்தில் விழாமல் எழுதிய என் கை விரல்கள் ,

உன் முகமே என் கண்முன்னே வந்து நின்று என்னை அனைக்கும் சுகம் கண்டேன்

என் நாவில் படாத சுவை யோ
அதில் என் கைகளுக்கு என்ன வேலை யோ
நான் எழுதும் போது அன்பே

வாழ தான் நான் நினைக்கிறேன்
என்னை போகவே நீ சொல்கிறாய்

காற்றை தான் நான் அழைக்கிறேன்
காற்று என்னை சுவாசித்திருப்பதை மறந்து

கனவுகளை நான் நேசித்தேன்
ஆனால் கனவுகள் என்னை நேசிக்கவில்லை

உலகில் உள்ள சுகமான நிகழ்வுகளை
தேடி சென்றேன் ,
அவை கூட என்னை பார்த்து
வர யோசிக்கின்றன

என்னை கொள்ளாமல் கொன்ற என் காதலிக்கு
நான் இன்னும் பணிவிடை செய்து கொண்டுயிருகிறேன்

அவளின் நினைவுகளை கொண்டு !


மனம் விசும் பூ வை தேடினேன் !
சுகம் வரும் சுவையினை நாடினேன் !
போதை இன்னும் மதுவில் ஆடினேன் !

யாரும் என்னை பார்க்க வில்லை
என்று உணர்ந்து கடவுள் ஒருவர் இருக்கிறார்,
என்று ஒருவன் உரைக்க. !

அவரை நான் வர சொன்னேன்

என் கைஎழுதுவில் உள்ள
தலை எழுத்தை மாற்ற !

கவிதை என்னும் நூலில்,
என் காதலியின் பெயர்
சொல்லாமல் ஒரு கவிதை
வரைய முயற்சித்தேன்
முடியவில்லை ,
முடிவில் அவள்
பெயர்தான் நின்றது,!

நான் சொன்னேன்,
திருமண வாழ்த்துக்கள் என்று,

அவளுக்கு தான் திருமணம்
எனக்கு இல்லையே

என் என்றால்
அவள் மனதும் ,
அவள் நினைவும்
என்னிடம் தானே உள்ளது

இருந்தாலும் இதயம் வலித்தது
காதல் தோல்வியில் ,
கடலில் முழுகாமல்
அவள் விட்டு வாசலில்
வாழை மரமாக நான் நின்றேன்
தோரணமாய் அவள் ,
திருமணத்தை பார்க்க,

கவலை இல்லை எனக்கு
அவள் சுகம் அளிப்பாள் ,
என் நினைவில்

சந்தோசமும் ! ,
துக்கமும் , !
என்னை கொல்ல முயற்சித்தன,

அவைகளை தள்ளி வைத்து ,
மறு காதல் செய்ய முயற்சித்தேன் ,
அதுவும்
தோல்வி தான் தந்தது,

என் வாழ்வில்

தெய்வம் ஓன்று இருந்தால்
எனக்கொரு காதலி தரட்டும்,

அவலாவது என்னை
மெய்யாக காதல் செய்யட்டும்,

பெண்களை நான் குறை கூர வில்லை

அவர்களின் கண்களை தான் குறை கூறுகின்றேன்
என்னை முதல் முதலாய் பார்க்க வைத்த ,
பொன் வண்டுகள் அவைகள் தானே !

நான் மண மாலையாகி உன் கணவனாக போகும் கையில் கிடந்தேன்,

அப்பொழுதாவது என்னை நீ அணிவாய என்று ஏங்கினேன் !

என்னை நீ வெறும் கவர்ச்சி பொருளாய் தான்
நீ என்னை கருதினாய்,
என்று உணர்ந்தேன் ,
வாடிய மல்லி பூ வாய் நான் போனேன்,

உன் முதல் இரவில் நான் மல்லி பூ வாய் வர மாட்டேன்

நான் நடுவில் நசங்கியும், சாக மாட்டேன்,

போனவள் ,!
போனவள் தான் !!,
வாழ்பவன் நான் !!!
ஒருவன் தான்.!!!!

என்று இந்த கண்ணில் கலந்த காதல் என்னும் கடலில் முழுகி விட்டேன்,
அவளின் பூ சிரிப்பின்
நினைவுகளோடு


அடுத்த ஜென்மம் ஓன்று இருந்தால்
நான் காதலே செய்யமாட்டேன்,

உன்னை போல் ஒருத்தியை திரும்பி
கூட பார்க்க மாட்டேன் ,

ஆனால் காதல் செய்வேன் ,
என்னை தேடி வந்த மனைவியோடு
மகிழ்ச்சியோடு
நான்
நலம்
நான்
நலம்
என்று முடியும் . மயக்கம்..

உனக்கு நான் யாரோ தான் !


நான் கல்லறைக்கு சென்றால்தான்
நீ _ என்னை காதலிப்பாயா ! இல்லை
நான் மரணமேடைக்கு சென்றால்தான்
நீ _ என்னை மணமுடிபபாயா !

...
உன் தாய்தந்தை மேல் அன்பும்
பாசமும் உண்மையாக வைத்தாயா !
உன் உடன் பிறப்புகளுடன்
உண்மையான பிரியம்காட்டினாயா !
உன் சகோதரிகளுடன் சகசமாக
பேசி சந்தோசபட்டயா !

என்மேல் அன்பு இல்லாத
உன்னிடம் அன்பு காட்டியது
என் தவறா ?
பண்பு இல்லாத உன்னிடம் நான்
பாசம் காட்டியது என் தவறா ?

ஆனால்........

காசு பணத்தை எதிர்பார்க்கும்
உன்னை நான் காதலித்ததுதான் தவறு !
உண்மை காதலே தெரியாத
உன்னை கட்டிபிடிததுதான் தவறு !
என் முகத்தையே பார்க்கபிடிக்காத
உன்னை முத்தம்மிட்டதுதான் தவறு !
மனசாட்சி இல்லாத உன்னை
நான் மணமுடிக்க நினைத்ததுதான் தவறு !

நினைவுகள் கூட இல்லாத உனக்கு
நிழல் எப்படி சொந்தமாகும் ?
கனவுகள் கூட இல்லாத உனக்கு
காதலும் கற்பனையும் எப்படி
சொந்தமாகும் ?
மனசாட்சி இல்லாத உனக்கு
மணமேடயும் மகிழ்சியும் எப்படி
சொந்தமாகும் ?

தோப்பிலே இருந்தாலும்
மரம் தனியாகத்தான் இருக்கும் !
நான் எங்கு இருந்தாலும்
என் நினைவுகள் எல்லாம்
உன் நினைவாகத்தான் இருக்கும் !

கன்னட.... கன்னட......
இடங்களில் மலரும்
காட்டு மலர் அல்லடி !
காதல் .........
உணர்வுபூர்வமான
உள்ளங்களில் மலர்வதுதான்டி
உண்மையான காதல் !
நேசிக்க தெரியாத
யேசிக்க தெரியாத- உனக்கு
உண்மையான காதல்
நீ தொடமுடிய தூரம்தான் !

நீ என்றும் என் காதலியாக இருப்பாய்
ஆனால் உன்னை பொருதவரெயில்
உனக்கு நான் யாரோ தான் !

அன்று...!


அன்று...!

கவிதை பூக்கள் தொடுக்க வைத்து

இன்று கண்ணீர் பூக்களை
...

பரிசாய் கொடுத்தவளே..

காதல் எனும் அகராதிக்கே

புது களங்கம் கர்ப்பித்தவளே..

எவரும் புரிந்திடா வண்ணம்

காதலை..

புதுமையாய் காய படுத்தியவளே..

உலகையே காக்கும் காதல்..!

என்னை மட்டும் கைவிட்டதே...

ஒரு வார்த்தை...

முன்பே கூறி இருந்தால்

மனமுவந்து தாரை வார்த்திருப்பேனடி

என் உயிரை ..


அதை விடுத்து

எனை உயிரோடு கொல்ல

காதல் எனும் ஆயுதம் தானா கிடைத்தது

உனக்கு.....

என் நினைவு பாதையில்...................


சுள்ளென்று சுடுகின்ற வெயில் காலத்திலும்
மனதுக்குள் மலைசாரலில் நனைந்து கொண்டிருந்தோம்,

நான் உன்னோடும்,
நீ என்னோடும் நேசம் கொண்டிருந்த காலங்களில்,
...

ஏனோ காலம் களவாடிக்கொண்டது
நாம் வசந்த காலத்தை,

இலையுதிர் காலம் முடிந்து பின்
மீண்டும் வசந்தத்தைப்போல்,
சில காலம் வசந்தத்தில் பயணித்து,
பின் வேரறுந்த மரமாகி போனேனடி,

உன்னோடிருந்த இன்பபொழுதுகள்,
நெஞ்சத்தில் நினைவோடும் நேரம்,
தரையில் நழுவி விழுந்து தண்ணிருக்காக,
ஏங்கும் மீனை போல் அல்லவா மனம் விம்முகிறது

அழகாய் அமைதியாய் செல்லும்
உன் நந்தவன வாழ்கையில்
கட்டுதீயாய் நான் வர விரும்பவில்லை,
எனினும்
என் வாழ்க்கை பாதையில்
உன் பயணம் முடிந்திருந்தாலும்,
என் நினைவு பாதையில்,
உன்னை பின் தொடர்ந்து கொண்டேயிருப்பேன்

நீ சொன்ன ஒரு வார்த்தை...

என்னை...
"கொல்ல"

ஆயிதாமோ...
விஷமோ....

தேவையில்லை.!

"பேசாதே"

என்று...
நீ சொன்ன.!!

ஒரு "வார்த்தை"
போதுமடி....!!!


 

நட்போடு காதலித்து...

நட்போடு காதலித்து...

அனைவரிடமும்
நட்புகொள்ள
முடியும்
ஆனால்
உன்னிடம் மட்டும் தான்
காதல்
கொள்ளமுடியும்
தெரிந்துகொள்ளடி...

காதலித்தால்
நம் நட்பு சாகும் என்கிறாய்
சாகும் வரை நட்போடு
இருக்கத்தான் உன்னைக்
காதலிக்கிறேன்
உணர்ந்து கொள்ளடி..

உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?

நட்பு காதலாகாது
என்கிறாய்
நட்பில்லாத காதல்
காதலாகாது
என்கிறேன்
நான்



நண்பனே காதலனாக
முடியாது என்கிறாய் நீ
காதல் சொல்ல வருபவன்
நண்பனாகும் போது
நட்போடு வருபவன்
காதலனாக முடியாதா என்ன?

எனக்கு நீ எப்பொழுதுமே
நண்பனாக வேண்டும்
என்கிறாய்
எனக்கு நீ எப்பொழுதுமே
நட்பான மனைவியாக
வேண்டும் என்றுதான்
சொல்கிறேன்
நான்..

நான் பிடிவாதக்காரி
என்கிறாய்
எனக்குப்பிடித்த..
என்னைப் பிடித்த..
வாதக்காரி நீ...

நட்பைதான் நான்
காதலிக்கிறேன்
என்கிறாய்
காதலிடம்
நட்பாய்
இருக்கிறேன் நான்
என் காதல் நீ

எல்லாரும் எனக்கு
ஒன்றுதான் என்கிறாய்
எனக்கும் காதலி
நீ ஒன்று மட்டும்தான்

நட்பு எல்லாவற்றையும்
கொடுக்கும்
காதலைத்தவிர...
காதல் எல்லாவற்றையும்
கொடுக்கும்
நட்பையும் சேர்த்து
தெரியுமா??



நான்
நானாக
இருக்க
வைத்தது
நட்பு...
நான்
நீயாக
உணரவைத்தது
காதல்..