Thursday, October 27, 2011

இது என் இறந்த கால காதலி பற்றிய என் நினைவு :)


என் சிறகுகள் உடைந்தன ,
என் கனவுகள் கலைந்தன ,
என் நிம்மதி தொலைந்தது ,
என் புன்னகை மறைந்தது ,
என் நாட்கள் நீண்டன ,
நம் காதலின் முடிவு நாள் அன்று
உன் குரங்குப்பார்வையால்
என்னை நீ தாக்கையில் ..


ஏன் காதலி...?

நீ என்னை காதலிக்கும் போது
நீ என் கணவன் என்று
சொன்ன நீ
இப்பொது
நீ காணமல் போனது
ஏன் காதலி...?


இது ஏன்..?

தூசு விழுந்த கண்களும்,
காதலில் விழுந்த இதயமும்,
கலங்கிக் கொண்டே தான் இருக்கும்....


Wednesday, October 26, 2011

நீ தூவிய காதல் விதை மண்ணில் விழுந்திருந்தால் பிழைத்திருப்பேன்....

நீ தூவிய காதல் விதை
மண்ணில் விழுந்திருந்தால்
பிழைத்திருப்பேன்....
கண்ணின் மணியில் விழுந்து விட்டதே..
கண்ணீர் வார்த்து விளைந்தும் விட்டதே...
இப்போது பிடுங்கி எறியச்சொன்னால்
என்ன செய்வேன்?
கண்ணீரோடு கலந்து ரத்தமும் வருகிறதே...
இது உடலில் ஏற்பட்ட ரணமில்லையே..
ஆறிவிடும் என உதறித்தள்ள...
உள்ளத்தில் ஏற்பட்டு விட்டதே...
இது உயிரில் வலிக்கிறதே...
உயிரை விட்டு விடவா?
என் நேசம் உனக்கு
சந்தோசம் தந்ததோ இல்லையோ
எனக்கு தெரியவில்லை...
இனிமேலும் என் வேதனை
உன்னை வேதனை படுத்த வேண்டாம்..
மறைக்கத் தொடங்குகிறேன்...
என் வேதனையை மட்டுமல்ல....
உன் வெறுப்பிற்கு பயந்த
என் நேசத்தையும் தான்...
மறைக்கத்தான் முடியும் என்னால்...
மறக்க முடியாதே...

Friday, October 21, 2011

ஒரு தலை ராகம்.,,

ஒரு சின்ன தூசியால் அவள் கண் கலங்கியபோது ...
என் இதயம் கலங்கியது.,,அந்த தூசிக்கு இருக்கும் வலிமை கூட ,,,,,,,,,, உன் காதலுக்கு இல்லையா என்று ........


நெஞ்சு துடிக்குதடி கொடியவளே

விழியில் எழுதிய வரிகள்
கண்ணீரின் கதையாய் ஆனதடி

இதழ் சொன்ன பொய்க் காதலில்
இலக்கியமும் கசப்பாய் போனதடி

இதயத்தை சிதைத்து பேதத்தை வளர்த்து
காதலின் இனிய ராகங்களை
மௌனத்தில் புதைத்து விட்டாயடி

கொடியவளே
நேசம் மறந்த உன் காதல் வேஷத்தை
நினைத்து விட்டாலே
நெஞ்சு துடிக்குதடி

பூக்களை மட்டும் கேட்க்காதே!!!

நீ என்னிடம்
எதை வேண்டுமானாலும்
கேள் - ஆனால்
பூக்களை மட்டும்
கேட்டுவிடாதே
ஏனென்றால்!
அழகாய் சிரிக்கும்
பூக்களை
கொலை செய்து
உன் கூந்தலில்
சூடுவதில்
எனக்கு
உடன்பாடு இல்லை...!!!

நானும் கொலைகாரந்தான்
ஆனால்!
பூக்களை
கொலைசெய்யும்
அளவிற்கு
கோழை அல்ல...!!!


Thursday, October 20, 2011

என்னவள் !!

தென்றலில் அசைந்தாடும் நாணலாய்
உன் தலை முடி

தென்றலின் வருடலாய்
உன் தீண்டல்

ஏழு சுவரங்களுக்கு பெருமை சேர்க்க
எட்டாவது சுவரமாய் உன் மௌனம்

பார்வை பறிக்கும் மின்னல்களுகிடையில்
என் மனதை பறிக்கும்
உன் மின்னல் பார்வை

புது இசை படைக்கும்
உன் கை கோர்த்து நடந்த
என் நடை பயணம்

நான் கண்ணாடி பார்கையில்
உனக்கென பிறந்ததாய் ஓர் உணர்வு

உன் உலகம் நானாய்
என் அனைத்தும் நீயாய்

வாழவேண்டும்.

நான் இறப்பது உன் மடி என்றாலும்
நான் வாழ்வது உன்னுடன் இல்லை என்றாலும் வரவேற்பேன் மரணத்தை
இருகரம் நீட்டி


இத்துடன் முடித்துகொள்

என் மனமென்னும் கைப்பிடியை
தளர்த்தி என் எதிர்காலம்
என்னும் கண்ணாடியை உடைத்தவளே

வார்த்தைகள் இல்ல வசனங்கள்
பேசி என் செவிகளை செவிடக்கியவளே
உப்பிட்ட தண்ணீர் என நினைத்து
என் கண்ணீர் சுவைத்தவளே

சுகம் இது என்று சொல்லி
என்னை சுமந்தவளையே
மறக்க செய்தவளே

நிலையிலதா உலகத்தில்
நிலையானது நம் காதல் மட்டுமே
எனசொல்லி நான் இருக்கும் நிலையறியாது
செய்தவளே

உலர்ந்தமலர் என்று உணர்ந்ததும்
அசுர பாதங்களுக்கு இறையக்கியவளே
போதும் என்றதும் மனதிற்குள்
போதையை புகுத்தியவளே


பார்வைகளால் என்னை பந்தடியவளே
இதோ உன் ஆட்டம் தோற்றுப்போனது
இத்துடன் முடித்துகொள் உன் காதல்
சூதாட்டத்தை
இழந்தவை வேண்டாம்
இருப்பவை போதும் எனக்கும்
இத்துடன் முடித்துகொள்
தோல்வி அனுபவமென்று துணிந்துவிடதே
மறுபடியும் விளையாட
ஆண்கள் வெட்கம் வேடிக்கை பொருளல்ல
ஒவ்வொருமுறை நீ ஜெயிக்கிரபோதும்
அதை வைத்து விளையாடுவதற்கு

அம்மா.......

ஒற்றை வார்த்தையே
ஒருகாலத்தில்
உச்சரித்து
சொல்ல தடுமாறி
உளறிய
என் நாக்கும்
இன்றைய நாட்களில்
தடித்தெழுந்து
வெளியே
தடுக்கி விழுந்து
தாறுமாறாய்
வெடித்து சிதறிய
வார்த்தைகளால்
உன்மனதை
சுக்குநூறாய்
உடைக்கின்ற வேளையிலும்
ஒற்றை சொல்கூட
உதிர்க்காமல்
ஊமையாகவே
இருந்துவிடுகிறாயே
உன் மௌனமும்
எனக்கான
மரண தண்டனைதான்...!

நான்
கோபப்பட்டு
கடுஞ் சொற்களை
தொடுத்து பேசியும்
கண்டதை யெல்லாம்
எடுத்து வீசியும்கூட
என்மீது
மட்டுமேன்
உனக்கான எதிர்ப்புகள்
துளிகூட இல்லையே...?

உன் துக்கம்
பலவற்றில்
நான்
பங்குகொள்ளவில்லையே
நீ கதறி அழுத
பல பொழுதுகளில்
நான் கண்டுகொள்ளவேயில்லையே
அப்படியிருக்க
நீ மட்டுமெப்படி
என் சிறு துளி
கண்ணீருக்கும்
படபடத்து
ஏன்
ஒப்பாரி வைக்கிறாய்...?

நான்
வெற்றிபெற்ற
வேளைகளில்
என்னை மட்டும்
காரணமாய் சொன்னாய்
நான் தோல்வியுற்ற
வேளைகளில்
வேறு யாரைவது
தேடிபிடித்து
அவர்கள்மீதல்லவா
பழிபோடுகிறாய்
ஏன் அம்மா...?

உன்னை
சிரிக்கவைக்க
நான்
எந்தொரு
சிறு முயற்சி கூட
எடுக்க வில்லையே
ஆனாலும்
நான் சந்தோசபட்டால்
உனக்கெப்படி
முகமலர்ந்த சிரிப்பு
முந்திக்கொண்டு
வந்துவிடுகிறது...?

ஊருக்கு வரும்போது
பார்ப்பவனெல்லாம்
உடம்பு ஏறிவிட்டதென்று
வினவியதை
கேட்டுவிட்டு
வீட்டுக்குள் உள்னுளைந்துடன்
இப்படி இளைத்துவிட்டாயேயென்ற
உன் வாய்மொழி கேட்டு
சற்று குழம்பிவிட்டு
நீயும் பொய் சொல்லுவாயோ
என்ற சிந்தனையில்
மூழ்கி போய்விடுகிறேன்
உன் பார்வையில் மட்டும்
என்னுடல்
தேய்பிறை போல்
தோன்றுவதன்
அர்த்தமென்ன
என் முழுநிலவாய்
நீ இருப்பதாலா...?

நீ
சாப்பிட்டாயா
என்று கேட்குமுன்னே
சீக்கிரம் வந்து
சாப்பிட சொல்லி
தொந்தரவு செய்கிறாயே
உனக்கு
பசியென்ற ஒன்றை
இறைவன்
கொடுக்கவில்லையா...?

நான் உண்டுவிட்டால்
உன்பசியும்
மறைந்துவிடுகிறது
உன் மனதும்
நிறைந்துவிடுகிறது
இது எந்தொரு
அறிவியலிலும்
இந்த உண்மை
நிரூபிக்கப்பட வில்லையே...!


உன் பாசம்
என்னவென்பதை
அறிந்தபோதும்
மழுங்கிப்போன
என் நெஞ்சம்
உன்னிடம் நேசத்தை
வெளிக்காட்ட தெரியாமல்
தொலைந்து கொண்டிருக்கிறதே...!

அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி
போய்விட்டதென்ற
இந்த உண்மையை
உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன்
அம்மா...!


Monday, October 17, 2011

என் அம்மா...........

எனக்கேதும் என்றால் பதரிடுவாள்
தன் உயிர் தனியே என்பதை
மறந்திடுவாள்
தன்னிகரில்லா ஒரு தெய்வம்
சுயநலம் இல்லா ஒரு ஜென்மம்
எங்கு வேண்டுமானாலும் தேடி பார்
என் தாயின்றி வேறு யார்

காதல் வாழும்.............

உற்றுப் பார்த்துவிட்டு
உதறிவிட்டாய் - நான்
செத்துபோகும் போதாவது
சிந்திப்பாயா என்னை.

கற்றுக்கொண்டுவிட்டேன்
காதலை நின்னால்- அதை
விற்றுப் பிழைப்பதற்கு
நான் செத்தே போகலாம்.

காற்றும் என்னில் மோத, அது
காதல் செய்ய வேண்டும்.
நேற்றே நானிறந்து போனால்
காற்றின் காதல்கூட தோல்வி

ஊற்றாய் பேசும் நீயும்
சேற்றை வாரி இரைத்தாய்
காற்றை அணைத்து நானும்
என் கனவை மறந்து பறந்தேன்

தேற்ற வேண்டிய நீயே -என்னை
தெரியாதென கை விரித்தாய்
தோற்றே போனேனோ நானும்
தோற்றாலும் என் காதல் வாழும்.


பெண்ணாக பிறக்க என்ன தவம் செய்தாய்...

பெண்ணுக்கு ஏழு பருவம்
ஆணுக்கு அதிலோர் உருவம்
"பேதை" என்பவள் உச்ச
போதை ஏற்றி ஆணின் காதில்
இம்சைகள் பாடும் தேவதை வம்சம்
இளமையின் துவம்சம்
(1 வயது முதல் 18வயது வரை)

"பெதும்பை" என்பவள் பதுமையானவள்
காவிய கவிதை கண்களில் பாய்ந்து
ஆணின் வாழ்வில் புதுமை தந்து
ஆயிரம் ஆண்டுகள் ஆயுளை
வளர்க்கும் அற்புத பருவம்
(19 வயது முதல் 23 வயது வரை)

"மங்கை" தானே மடத்தினை காப்பாள்
ஆணின் உள்ளே ஆணவம் தடுப்பாள்
குடியை காக்க சூளுரை ஏற்பாள்
( 24 வயது முதல் 30 வயது வரை )

"மடந்தை"யானவள் கடமையில்
களிப்பவள் கணவன் வாழ்வில்
கருணையை தருபவள்
கற்பை காத்து கலைகள் வளர்ப்பவள்
(31 வயது முதல் 35 வயது வரை)

"அரிவை" பருவம் அறுசுவை பருவம்
ஆணின் அன்பில் உழன்றிடும் பருவம்
இதயம் தொலைக்கும் இன்னொரு பருவம்
உறவை வளர்க்க துடித்திடும் பருவம்
(36 வயது முதல் 45 வயது வரை )

"தெரிவை" என்பவள் முற்றும் உணர்ந்தவள்
தெரிந்தால் தவறை உடனே தடுப்பவள்
வாழ்வின் உயர்வை எட்டி பிடிப்பவள்
வளமுடன் வாழ வழிகள் தருபவள்
(46 வயது முதல் 50 வயது வரை)

"பேரிளம்பெண்" பருவம் இன்னொரு குழந்தை
பருவம், அன்பிற்கு ஏங்கும் சிறுமையின்
உருவம், ஆலயம் காண துடித்திடும் பருவம்
பெண்கள் வாழ்வில் கடைசி பருவம்
இது தான் பூமி தெய்வத்தின் உருவம்
(51 முதல்....... )

Sunday, October 16, 2011

என் அவள்

பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூரதள்ளி
நம்பிக்கையை என் வசப்படுத்தி
என் அவள் கரம் பிடிக்க எண்ணினேன்.
என் அவள்....
என்னொருவர்....
கைபிடித்து....
சென்று....
விட்டாள்....


 

மெய்யான வார்த்தை பொய்யான காதல்

பொய்யான
வார்த்தைகளைக் கொண்டு
உன்னைக் கவிதையாக
வர்ணித்ததனால்த்தான்
என்னிடம் நீ பொய்யாகவே
காதலித்திருந்தாயோ???


நீ தந்த கவிதை

இதயத்தில் வாழும்
நினைவுகளுக்கு முடிசூட்டுவிழா...
உதறி சென்ற மனசுக்கு
மன மேடையில்
பாராட்டு விழா...
ஏமாற்றம் தந்த உயிருக்கு நன்றியுரை...
ஆசையை அடக்க கற்று தந்தாய்..
மனக்கல்லில் சிற்பம் செதுக்கினாய்....
இதுவும் நீ உரைத்த
நினைவுகளால்
உருவான கிறுக்கல்கள்...


Friday, October 14, 2011

காதல் ஒரு போதை தானடா

அது ஒரு சாபம் அழகிய சாபம்

இனிக்கும் சோகம் காதல் ஒரு சோகம்

கவிதையாய் தொடங்கும் கல்லறையில்

முடியும்

விழிகளால் வசியம் தொடங்கும் ஒரு விஷம்

கவிதையாய் பேசி நீ தொலைந்திடும் தோஷம்

முடியும் வரை தெரியாது

உன்னை முடிக்கும் வரை ஓயாது

புன்னகை மறந்து போகும்

மனம் தனியே பேசும் எதை பார்த்தாலும்

வீசும் விட்டு சென்ற காதலின் வாசம்

உன்னை உனக்கு வெறுக்க பிடிக்கும்

உயிரை விசிறி எரிய பிடிக்கும்

தாடி வச்சு அலைய பிடிக்கும்

காதலரை பார்த்தால் கோபம் வெடிக்கும்

தலையில் அடித்து கொண்டு சிரிக்கும்

காதல் ஒரு போதை தானடா

தீர்ந்து போகும் பானம் போலடா

Monday, October 10, 2011

காதல் வந்தாலே.......

தொடர்கிறேன் என்றும் உன்னை
தோற்றாலும் பரவாயில்லை
உன்னிடம் என்னை.

புரியாமல்தான் உன்னை நேசித்தேன்.
ஆனால், இன்று புரியபுரிய
உன்னையே சுவாசிக்கிறேன்.

எழுத வார்த்தையில்லை உன்னைப்பற்றி
இருந்தும் உன்னை எழுதாமல்
இருக்கமுடியவில்லை என்னால்.

காதல் வந்தாலே கிருக்கன்கூட
கவிஞன் ஆகிவிடாலும்,
அதுதான், கிறுக்கல்கள் எல்லாமே
என் காதல் என்றுசொல்லி
உன்னை ஏமாற்றுகிறேன்.
அதற்காக நீ என்னை ஏமாற்றிவிடாதே!


திரும்ப தர முடியுமா உன்னால்?

வான் நிலா
வானின் கண்ணீர்
புல்வெளி
பூங்காவனம்
இப்படி அனைத்தயும் ரசித்த
என் மென்மையான மனதை !

கடிகாரத்தையும்
கையில் இருக்கும் செல் போனையும்
மாறி மாறி பார்த்திருந்த
அந்த கணத்தை !

ஈமெயிலில் refresh button தட்டியும்
chat messenger லில் உன் பெயர் பார்த்தும்
காத்திருந்த அந்த நிமிடங்களை !

துக்கமின்றி துள்ளி குதித்தோடிய
என் குழந்தை உள்ளத்தை !

பெற்றோர் என் மேல்
இழந்த நம்பிக்கையை !

உன் உறவுக்காக
நான் தொலைத்த சொந்தங்களை !

உன்னை நினைத்து
உனக்காக வாழ்ந்த
ஒவ்வொரு வினாடியை !

உயர்ந்த இலட்சியங்களுடனும்
பலவித கனவுகளுடனும்
வாழ்ந்து வந்த
தன்னம்பிக்கையை !

இழந்துவிட்ட என் இறந்தகாலத்தை
மறந்துவிட்ட என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்ட என் சுயத்தை

திரும்ப தர முடியுமா உன்னால்?


நான் கொண்ட காதல் !!!

காதல் கொண்ட என் உள்ளம் - உறங்க மறுக்குது உன் நினைவால் !!
சூரியனாய் சுட்டெரித்தால் உன் பார்வை - நான் ஓர் பீனிக்ஸ் பறவையடி உன் முன்னே !!
மீண்டெழுவேன் எப்போதும் உனக்காக - உன் இதய நாண்களாய் !!!
நான் கொண்ட காதல் - என் இதய அறையின் பொக்கிஷம் !!!

Sunday, October 9, 2011

கைவிடப்பட்ட காதல்...!!!!

கைவிடப்பட்ட வீட்டின் சுவற்றில்
கரித்துண்டால் எழுதியிருந்தார்கள்
அவர்களின் பெயர்களை
ஏதோ காரணங்களால்
பிரிந்தும் போனார்கள்
அவர்களால் கைவிடப்பட்ட
காதல் மட்டும்
அந்த கைவிடப்பட்ட வீட்டில்
அவர்களின் பெயர்களைப் பார்த்தப்படி
அழுதுகொண்டிருக்கிறது.....!!!!!

உண்மை காதலடி கண்ணே....!!

வெண்மதியை
நான் வெறுத்தேன்
தேய்ந்திவிடும் வெண்ணிலவை
தேயா உன்னுடன்
ஒப்பிட்டதால்....


வானவில்லை
நான் வெறுத்தேன்
உன் வண்ண
அழகுதனை
நிரந்தாரமில்லா
அதற்கு ஒப்பிட்டதால்...


பூமியை நான்
வெறுத்தேன்
பொறுமையின்
இலக்கணமான
உன்னை
பூமிக்கு ஒப்பிட்டதற்காக......


பூவிதழை நான்
வெறுத்தேன்
வாடிவிடாதுன்னழகை
பூவாக
வர்ணித்ததனால்.....



பெண்ணே
உன்னை வர்ணிப்பதை
விரும்பியும்
அவை உன் உண்மை
அன்பிற்கு
ஈடானதல்ல
என்றுணர்ந்த
என்னையா
பெண்ணே நீ
உண்மையாகவே வெறுத்துவிட்டாய்.....?


மரணிக்க
துடிக்குமென் உள்ளம்
மறுக்கின்றது
மரணத்தை
ஏற்றுவிட.....



அன்பே
என் மரணம்
உன்
வாழ்க்கையின்
இன்பங்களை
நிலைகுலைத்துவிடும்
என்பதனால்......


காத்திருப்பேன்
பெண்ணே
உன்
வருகைக்காக
அல்ல
வாழ்வில்
இன்பமாய்
வாழ்வதை
ரசிப்பதற்காக......


என்
காதல்
ஏழைக் காதல்தான்
அன்பே
இருந்தபோதும் - இது
உண்மைக்காதலடி கண்ணே......!!

Saturday, October 8, 2011

பூக்களை மட்டும் கேட்க்காதே!!!

நீ என்னிடம்
எதை வேண்டுமானாலும்
கேள் - ஆனால்
பூக்களை மட்டும்
கேட்டுவிடாதே
ஏனென்றால்!
அழகாய் சிரிக்கும்
பூக்களை
கொலை செய்து
உன் கூந்தலில்
சூடுவதில்
எனக்கு
உடன்பாடு இல்லை...!!!

நானும் கொலைகாரந்தான்
ஆனால்!
பூக்களை
கொலைசெய்யும்
அளவிற்கு
கோழை அல்ல...!!!


அழ (வைக்கும்) கு காதலி"

விளக்கில்லா வீட்டில்
விட்டில் பூச்சி..
என் இதயத்தில் உலவும்
நீ.....

கருப்பு கனவில் பூக்கும்
வெள்ளை ரோஜா
நீ.....

எனக்கு வாழ்வை தருவதும்
என்னிடம் வாழ்வை பெறுவதும்
நீ.....

நான் நிற்கும் இடத்தில்
நீ இல்லை என்றாலும்
என் நினைவெல்லாம் நீ தான்....

நான் உன்னிடம் பேசவில்லை,
ஆனாலும் உன்னைப்பற்றி பேசாமல் இல்லை...

சில நேரங்களில் வாழ்க்கையில்
தடுமாறி விழும் போது என்னை எழ வைத்தாய்,
பின்பு பிரிவை பரிசாக தந்து ஏனடி
என்னை அழ வைத்தாய்..!