Monday, October 17, 2011

பெண்ணாக பிறக்க என்ன தவம் செய்தாய்...

பெண்ணுக்கு ஏழு பருவம்
ஆணுக்கு அதிலோர் உருவம்
"பேதை" என்பவள் உச்ச
போதை ஏற்றி ஆணின் காதில்
இம்சைகள் பாடும் தேவதை வம்சம்
இளமையின் துவம்சம்
(1 வயது முதல் 18வயது வரை)

"பெதும்பை" என்பவள் பதுமையானவள்
காவிய கவிதை கண்களில் பாய்ந்து
ஆணின் வாழ்வில் புதுமை தந்து
ஆயிரம் ஆண்டுகள் ஆயுளை
வளர்க்கும் அற்புத பருவம்
(19 வயது முதல் 23 வயது வரை)

"மங்கை" தானே மடத்தினை காப்பாள்
ஆணின் உள்ளே ஆணவம் தடுப்பாள்
குடியை காக்க சூளுரை ஏற்பாள்
( 24 வயது முதல் 30 வயது வரை )

"மடந்தை"யானவள் கடமையில்
களிப்பவள் கணவன் வாழ்வில்
கருணையை தருபவள்
கற்பை காத்து கலைகள் வளர்ப்பவள்
(31 வயது முதல் 35 வயது வரை)

"அரிவை" பருவம் அறுசுவை பருவம்
ஆணின் அன்பில் உழன்றிடும் பருவம்
இதயம் தொலைக்கும் இன்னொரு பருவம்
உறவை வளர்க்க துடித்திடும் பருவம்
(36 வயது முதல் 45 வயது வரை )

"தெரிவை" என்பவள் முற்றும் உணர்ந்தவள்
தெரிந்தால் தவறை உடனே தடுப்பவள்
வாழ்வின் உயர்வை எட்டி பிடிப்பவள்
வளமுடன் வாழ வழிகள் தருபவள்
(46 வயது முதல் 50 வயது வரை)

"பேரிளம்பெண்" பருவம் இன்னொரு குழந்தை
பருவம், அன்பிற்கு ஏங்கும் சிறுமையின்
உருவம், ஆலயம் காண துடித்திடும் பருவம்
பெண்கள் வாழ்வில் கடைசி பருவம்
இது தான் பூமி தெய்வத்தின் உருவம்
(51 முதல்....... )

No comments:

Post a Comment