Tuesday, November 29, 2011

அம்மா....

என்னை
கருவாக கருவறையில்
தாங்கியவள்

நடக்கும்வரை தோள்களில்
தாங்கியவள்

குடிக்கும்வரை மார்பினில்
தாங்கியவள்

உறங்கும்வரை மடியினில்
தாங்கியவள்

அம்மா...

இதுவரை என்னை
உயிராய் தாங்கிய உன்னை
இனி நான் என் கைகளுக்குள்
வைத்து தாங்குகிறேன்

அம்மா...

எனக்கு இது ஒன்றும் சுமையாக இல்லை
காரணம்
இந்த கைகளும் நீ கொடுத்தவை தான்

அம்மா....


Sunday, November 27, 2011

கருப்பு நிற தோழியே

நீ கருப்பாய் இருக்கிறாய், அதனால்தான்
நான் உனக்கு எடுப்பாய் இருக்கிறேன்

உன் முக அழகு கருப்பாய் இருந்தாலும்
உன் மனசு உள் அழகு எப்போதும் வெள்ளை தான்

நான் கோவப் பட்டு உன்னை கருப்பு என்றாலும்
என் மனதில் நீ எப்போதும் வெளுப்பாய்தான் இருக்கிறாய் தோழியே

அடுத்த ஜென்மம் ஓன்று இருந்தால் நீயே
எனக்கு மனைவியாக ஆசைப்படுகிறேன் தோழியே

யார் கருப்பா இல்லை :
தமிழகத்தை கலக்கி வரும் சுப்பர் ஸ்டார் கருப்புதான்

கவிதையில் உயிர் வாழும் கவியரசு கருப்பு தான்

என் தோழியே

தூய உள்ளம் கொண்டவள் நீ அதனால்
உன் வெளி அழகு தெரியாது

வினாய் கவலை வேண்டாம், என் தோழியே
நம் நாட்டிற்கே கருப்பு தான் சிறந்தது
உயர்ந்தது
வளர்ந்தது

தோழியே உன் நிறம் மாற்ற நான் வெண்ணிலவை
கேட்டேன்

அது கூட உன் அழகில் தான் வெளிச்சமாய் இருக்கிறதாம்

அதை கேடுக்காதே என்று சொன்னது நிலா

போதுமா என் கருப்பு நிற தோழியே .....
உன் கருமையான அழகுக்கு .....


Thursday, November 24, 2011

இடம் இல்லை போய் விடு...!

மலரே முள்ளை வெறுக்காதே..!
உன்னைப்போல் அதற்கு
முத்தமிட்டு காதல் சொல்லத் தெரியாது..!
உன்னை குத்தியே தன் காதலை சொல்லும்..!
வண்டுகளை புரியத் தெரிந்த உனக்கு ஏன் உன்
புன்னகையை விரும்பும் முட்களை
புரிந்து கொள்ள முடியவில்லை..?!
இனி என் காதல் கவிதைகளில் உனக்கு
இடம் இல்லை போய் விடு...!


வலிக்குதடி......

உன்னக்க காத்திருந்த தருணங்கள் பிடித்ததடி !!!!
உன்னுடன் வர்ணித்த இயற்கை பிடித்ததடி !!!!
உன்னுடன் கழித்த காலங்கள் பிடித்ததடி !!!!
அனால் ......
நீ என்னை கைவிட்டுவிடாதே என்று கேட்ட வார்த்தை ........
வலிக்குதடி ! ! ! வலிக்குதடி ! ! !


Tuesday, November 22, 2011

வாழ்த்த மட்டுமே தெரியும் காதலுக்கு..!

எனை விட்டு பிரிந்த தருணம்
வார்த்தைகளும் விடுப்பு
வாங்கி கொண்டதே..

கவிதையாகி அர்ச்சித்த
உன் வார்த்தைகள்
ஆயுதமாகி எனை
பொசுக்கியதேன்

மணிக்கணக்காய் உனக்கென
காத்திருந்த பாதையெல்லாம்
மயானக்காடாய் மாறியதேன்..

தோல்விதான் காதலின் வேதமா
தோற்கடிக்கதான் நீ வந்த நோக்கமா.. .

சரிவராது என்ற என் வாதத்தை
வென்றது எல்லாம் இன்று
என்னை சரிய வைக்க தானா..

உன்னதமான காதலை
சிதைத்து விட்டு
வாழ்வில் எதைத் தேட
இன்னொரு துணை
தேடிக் கொண்டாய்..

உண்மையைக் கொன்றுவிட்டு
ஒன்றுமில்லா உள்ளத்தோடு
கரை கடந்தவளே..

உன்னை வாழ்த்துவது தவிர
என் காதல் வேறொன்றும்
சொல்லித்தரவில்லை என்னவளே..

Saturday, November 19, 2011

அம்மா .......................

அம்மா

என் இதய அறை நான்கு என்று சொன்னாய்,
அதில் நீ எவ்வறை என்று சொல்ல தவறியதேன்..

நூறு கிராம் எடையுள்ள என் இதய வீட்டில்,
நூறு கோடி ஆண்டுகள் வாழ்ந்த தேவதை நீயோ..

நீ ஊட்டிய பிடி சோற்றில் ஊரிய என் உடல்குருதியின் ஒவ்வொரு செல்களும்,
உன் மணிமண்டபத்தின் ஒவ்வொரு படிக்கட்டுகள் தானே!,..

நீ செய்த பழயசோறு..
நித்தம் ஒருமுறை , ஊட்டிவிட நீ..

உறங்க நான்..
ஊமை கதை சொல்ல நீயும் , உன் மடியும்......

அம்மா !

நாம் செய்யும் எதையும்
மன்னிக்கும்
நீதி மன்றம் ஒன்று உண்டென்றால்.

அது நம் தாயின் இதயம் தான்...


அம்மா!!!

நம்மை இந்த உலகத்தில் உலவ விட்ட தெய்வம்!!!
யாராலும் ஈடு செய்ய முடியாத சொந்தம்!!!
உன் பாசத்திற்கு நிகர் எதுவுமில்லை இந்த உலகத்தில் - அம்மா!!!

Wednesday, November 16, 2011

ஒவ்வொரு பிகரும் தேவை மச்சான்....

கண்ணால் பல கவிதைகள் பேசுவாள்
கண்ணகி ஒருத்தி ,
மந்தாரமாய் மனதை வருடி செல்வாள்
மாதவி ஒருத்தி,

வானவில் வண்ணமாய் எண்ணத்தில் ஓடுவாள்
வானதி ஒருத்தி,
நடைதனில் நளினமாய் இடையினை ஆட்டுவாள்
நந்தினி ஒருத்தி,

ரம்யமாய் நம்மை ரசிக்க வைப்பாள்
ரம்பை ஒருத்தி,
ஊமை நெஞ்சினில் ஊசி ஏற்றுவாள்
ஊர்வசி ஒருத்தி ,

மேகமாய் வந்து தாகமூட்டுவாள்
மேனகை ஒருத்தி,
தாகமேற்றியே தண்ணி காட்டுவாள்
தாரகை ஒருத்தி,

ஓரப் பார்வையில் ஒளிதனை ஏற்றினாள்
ஓவியா ஒருத்தி ,
கள்ளச் சிரிப்பினில் கலவரமூட்டினாள்
காவியா ஒருத்தி,

மோகப்பேய்போல் மூர்சையாக்குவாள்
மோகினி ஒருத்தி...
காமத்தீயினில் கலவரமூட்டுவாள்
காமினி ஒருத்தி,

தேனிலும் மேவிய தீம்சுவை போன்றவள்
தேன்மொழி ஒருத்தி ,
பூவிலும் மெல்லிய பாரமும் தாங்கிடா
பூங்கொடி ஒருத்தி,

காதலியை மட்டும் நித்தமும் நினைத்து
பித்தம் ஏறி பிதற்றுவதை விட ......
காணும் மங்கையர் எழில்கண்டு கவிதைகள் புனையும்
கவிஞனாய் வாழ்ந்துவிடுவதே என்றும் சிறப்பு !

ஆதலால் வைக்கப்பட்டது இந்த தலைப்பு........

+++++===== ஒவ்வொரு பிகரும் தேவை =====+++++
----------------------- மச்சான் ----------------------


Tuesday, November 15, 2011

உலகமே விரும்பும் உயிர் நீ.

அழகானவனே
என் இதயத்தை திருடியவனே
உன் அருகில்
உலக அழகனே நின்றாலும்
எனக்கு நீதான் அழகு.

நீ இல்லை என்றால்
அந்த இடமே நரகம்.

நீ இந்த உலகில் இல்லை எனில்
பூமா தேவியே உலகை அழிந்து விடுவாள்.

உன் பதம் படவில்லை என்றால்
பூமி உள்ளே சென்று விடு.

உன் பார்வை கிடைக்க வில்லை என்று
பல பறவை கூட்டம் தற்கொலை செய்து கொண்டது,

அழகான மயில்கள் எல்லாம் வரம்
இருந்து உன் கண் இமைகளில்
தன் மயில் ரங்கைகளை வளர்த்து கொண்டது.

உன் குரல் கேட்டு குயில் கூட்டம்
பாடுவதை நிறுத்தி விட்டது.

வண்டு கூட்டம் உன்னை சுற்றி வந்தது
அழகான ரோஜா நீ என்று.

தென்றலும் உன்னை தேடி வந்தது
உன் அழகான மேனியே திண்டி சென்றது.

உன்னை பார்க்காதவர்கள் இருபதல்தான்
என்னிடம் போட்டிக்கு ஆள் குறைவு
பார்ந்து விட்டால் உன்னை அடைவது கஷ்டம்.

நீ எனக்கு மட்டும் கிடைச்ச பொக்கிஷம்
மறைத்து வைத்து கொள்றேன் உன்னை.

எனக்கு கிடைக்க வில்லை என்றாலும்
உன்னை விடு தர மாட்டேன்.

உலகமே விரும்பும் உயிர் நீ.
எனக்கு மட்டும் கிடைக்குமா

எங்கே? இங்கே?

அன்பே! இறைவனாலும் நம்மை பிரிக்கமுடியாது

என்று சொன்ன உதடுகள் எங்கே?

என்னுடைய உயிர் உனக்காகதான் மட்டும்

என்று துடித்த இதயம் எங்கே??

என்னை காதல் நேசத்துடன் பார்வையிட்ட

உனது இரு விழிகள் எங்கே???

எனது மூச்சு காற்றையே உயிர் காற்றாக

ஏற்று கொண்ட உனது நேசம் எங்கே????

அய்யகோ! இவை அனைத்தும் வேறு ஒருவர்க்கு

சொந்தமாகிவிட்டது என்று கூறிய

உனது காலாவதியான திருமண அழைபிதல்

மட்டும் இங்கே எனது கரங்களில் !!!!!!!!!!!!

குனிந்தே வெட்கப்படுவதால்

நீஎப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க
முடிகிறது!


கண்ணீரில்லா காதல் கண்பட்டுப் போகும் என.,

உன்மேல் நான் கொண்ட காதலுக்கு
காரணங்கள் கிடைக்கும் வரையில்
கொஞ்சம் பழக முடியுமா?
என்றுன்னைக் கேட்ட போது,
இமைகள் மெல்ல மூடித் திறந்து
சம்மதம் எனச் சொல்லிச் செல்ல
பின்தொடர்ந்து சென்றது என் குரல்..!!

இமைகளுக்குள்ளே உன்முகத்தை
வரைந்து விட்டேன்!!
கண்மூடினாலும் உன் முகமே என் விழிகளில்!!

உன் பெயரால் உருவான
கவிதை ஒன்றை உனக்குப் பரிசளிக்க,
உன் உதட்டுச் சாயம்
என் கன்னத்தில் எழுதியது காதல் என்று!!

கண்ணீரில்லா காதல்
கண்பட்டுப் போகுமென
என் கண்ணை வருத்திகொண்டேன்
துடைக்க நீ வருவாய் என எண்ணி,
நீயும் வந்தாய் கண்ணீருடன்..!!

காரணம் தேடி வந்த எனக்கு
காரணம் ஒன்றும் கிடைக்கவில்லை..!!
ஒரு தலைக்காதல் இருதலையாக
உந்தன் காதல் கிடைத்தது.,
கண்டேன் இப்போது,
உண்மைக் காதலுக்குக் காரணம்
எதுவும் இல்லை என்று..!!


Saturday, November 12, 2011

மனமுடைந்த மங்கையின் மனக் குமுறல்...................!!

புதிதாய்ப் பிறந்தேன்
என்னை வாரி அணைத்தது
உறவினர் மட்டுமல்ல
சமுகமும்தன்.......

புதிதாய் பூத்தேன்
ஊர்கூடிஎன்னை
அலங்கரித்து
வயதிற்கு வந்துவிட்டாள்
மகராசி
எனக்கூறி
வாழ்த்துப் பல பாடி
விருந்துண்டு சென்றது.......

வாலிபர்கள் என்னை
வர்ணித்தனர் பலவாறு
மனம் குதுகலிக்க......
நாணம் கொள்ள......
நளினம் பெருக்கடுக்க நான்
நடை பயின்றேன்......

மண மகன் பார்த்து
மண நாள் குறித்து
இன்பம் ததும்ப
இன்சுவை பலகாரம்
விருந்துபசாரம்
மேள தாளக் கச்சேரி.........
இல்லறம் நல்லறமாய்
நடத்துகையில்
காலத்தின் கோலத்தில்
நானென்ன விதிவிலக்கா .....????

காலனவன் பறித்துச் சென்றான்
என் பூவோடு பொட்டினை
மட்டுமல்ல
புதைந்திருந்த இன்பமெல்லாம்....
துணையிழந்த துயரம்
முழுமையாகக் கழியவில்லை
மகராசி என்றவர்கள்
போ நீ ஒருபக்கம்
நல்லது நடக்காது
என்கின்றனர்
நான் வெள்ளையுடுத்தது
விதவை என உணர்த்த அல்ல
என் மனதின் வேதனையினை
புடமிட்டுக் காட்டிடவே.....
சகுனம் சிறந்தது வா என் முன்
என்றவர்கள்
ஒதுக்கி மூலையில் கிடவென்கின்றனர்
மாறாத சமூகமே
மனைவி மரித்ததும்
புது மணமகன் என்கின்ற நீங்கள்
ஏன் பெண்களை மறுத்து மனதை நொறுக்கி மிதிக்கிண்றீர்கள்
மறு மணம் கேட்கவில்லை
மனம் உண்டு புரிந்தால் போதும்
அம்மனத்தில் உணர்வுண்டு
புரிந்தால் போதும்
நாளை உமக்கும் வரலாம்
புரிந்தால் போதும்
மனமுடைந்த மங்கையின்
மனக்குமுறல் இது......................!!

குறிப்பு:-

இக் கவிதை உட்பட சில கவிதைகள் பெண்கலின் தமிழ் சமுகத்தின் முக்கிய பிரச்சனைகளை முற்றாக ஒழிக்க முடியாவிடினும்
சிறிதேனும் மாற்ற எடுக்கும் சிறிய முயற்சி
முடிந்தவர்கள் அங்கீகரிக்கும் படி தாழ்மையுட வேண்டுகிறேன்
தவறெனில் மன்னிக்கவும்........


அன்பின் சின்னம் அன்னை தெரசா...............

கல்கத்தா வீதிகளில் விடுதிக்காக
கையேந்தி சென்றார் அன்னை

...
உமிழ்ந்தான் ஒரு வியாபாரி
உமிழ்ந்தது எனக்குப் போதும்

விடுதியில் உள்ள தொழு நோயாளிகளுக்கு
விரும்பியதைக் கொடு என்றார்

காலில் விழுந்து வணங்கினான்
கடையில் இருந்து உமிழ்ந்தவன்

இன்னா செய்தாரை திருக்குறள் வழி
இனிதே வாழ்ந்துக் காட்டிய அன்னை

நோபல் பரிசுக்கே நோபல் பரிசு தந்தவர்
நேயம் மிக்க தன்னலமற்றத் தாய்

இறந்த பின்னும் வாழ்பவர்கள் மிகச் சிலர்
மிகச் சிலரிலும் சிகரமானவர் அன்னை

பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர்
பெண்மையின் மேன்மையை உணர்த்தியவர்

பிறருக்காகவே வாழ்ந்திட்ட மாதா
பண்பால் சிறந்திட்ட பிதா

அயல் நாட்டில் பிறந்திட்ட போதும்
அனைவரின் உள்ளத்திலும் வாழ்பவர்

மனிதநேயம் கற்பித்த மனிதம்
மனிதருள் மாணிக்கமாக ஒளிர்ந்த புனிதம்

அன்பின் சின்னம் அன்னை தெரசா
பண்பின் சிகரம் அன்னை தெரசா

Thursday, November 10, 2011

காதல் இறந்துவிட்டது

கண்ணில் பட்ட தூசியை களைந்துவிடலாம் .,என் இதயத்தில் நீ குத்திய ஊசியை எப்படி கழட்டுவது.,
காதல் என்னும் வேர் என் உள்ளத்தில் பரவ வைத்தாய்.,மலர்ந்து காயாகி கனியானபோது.,மரத்தையே வெட்டி விழ்த்தியது எதற்க்கோ???உன்னை எண்ணும் போது என்னுள் நானே கரைந்து போகிறேன்.,உன் எண்ணத்தால் நானும் தினம் தினம் இறந்து போகிறேன்.,மீண்டும் பிறக்கவேண்டும் உன்னை மணப்பதற்காக இல்லை,அதற்குள் வேறு ஒரு பெண்னை காணமாட்டெனா என்பதற்காக?
மாறுமா என் மனம்.,மகிழ்ச்சி தருமா அந்த தினம் .,.,


என்னை மயக்க....

ரிஷிகளை மயக்க
தேவலோக பெண்களை
அனுப்புவான் அந்த இந்திரன்!
எந்த தவமும் செய்யாத
என்னை மயக்க,..... உன்னை
எதற்காக அனுப்பினான்
அந்த மடயன்.....?


Wednesday, November 9, 2011

என் தாய் இன்னும் கர்ப்பிணி தான்...

என் தாய்.

என் போன ஜென்மத்து
தவத்தின்
இந்த ஜென்மத்து
வரம் .

இவளை கடவுளென்று
சொல்லி
அன்னியப்படுதிவிட மாட்டேன்...

கருவறை இருள் தான்
உலகமோ என்று
நினைத்த வேளையில்
“என் கருவறை வானத்தின்
நிலவு நீயடா”
என்றுரைத்தவள் .

இரவின் இருள்
என்னை –என் தாயின்
கருவறைச் சுவரில்
கிறுக்க அழைக்கிறது..

எனக்கு பசிக்கும்
நேரமெல்லாம்
தன் உயிரை
உலையில் போடுவாள்.

உன்னை பிரிக்க
ஆசைப்பட்டால்
இறைவனை –நான்
பாவி என்பேன்.

என் குழந்தை பருவ
தலாட்டினை கேட்டு
இன்னும் என் இதயம்
குரட்டை இட்டு
உறங்குகிறது ...

தன் கருவறையிலிருந்து
இறக்கி வைத்தவள்
என்னை- தன்
இதயக் கருவறையில்
சுமக்கிறாள் .

என் தாய்
இன்னும்
கர்ப்பிணி தான் ...

Tuesday, November 8, 2011

வலி................

கண்டிராத உன்னை பற்றி
தினம் ஒரு கவிதையை
எழுத நினைத்தேன்.........
முடியவில்லை..!!
நான் காணுகின்ற
உன் அன்பை பற்றி
எழுத நினைத்தேன் ........
முடியவில்லை ....!!
இப்படி உன்னை பற்றி
நினைத்து-நினைத்து
எழுத நினைத்தேன் ........
முடியவில்லை ....!!
வார்த்தைகளால்
சொல்ல முடியாத
ஒன்றை சொல்வதற்கு ...
கனத்த மனதோடு
கற்பனை செய்து
கவிதையை
எழுத நினைத்தேன் ........
முடியவில்லை ....!!
எல்லாம் முடிந்த பின்
உனக்காக எதுவும்
எழுதாமலே இன்று
உன்னையும்
இழந்து விட்டேன் ...!!!
எல்லாம் .......
பொய்யாய் போனது
என் வாழ்வில்.......
உனக்காக எதுவும்
எழுதாமலே ..................!!!!


எனது கவிதை

என் கவிதையை படிக்க நான் யாருக்கும்

அனுமதி தந்ததில்லை

ஏனெனில் என் காதலுக்கு சொந்தக்காரர்கள்

யாரும் இல்லை

ஏட்டை நிரப்பிவிட்டு சாய்ந்து விடுவேன்

ஒரு ஓரமாய்

திருட்டு தனமாய் அவள் வந்து படிக்கிறாள்

தென்றலோடு கலந்து

காவலுக்கு முள் செடி ஒன்றை வளர்த்தேன்

அவள் வந்து தொட்டதால் அது ரோஜாவாக

மாறியது

இப்படிக்கு

என் நிலையை படு மோசமாய்

சில சமயங்களில் தர்ம சங்கடமாய்

என்ன செய்வேன் பலமுறை யோசித்தேன்

திடீரென்று தோன்றியது இந்த யோசனை

என் காதலை காவலுக்கு வைத்தேன்

அவள் நட்பு போர்வை போர்த்த மறுபடியும்

வந்தாள்

நொந்துவிட்டது என் மனம்

முடிவில் சொல்லிவிட்டேன்

என் கவிதையை நீ வாசிக்க வா

ஆனால் அதற்கு முன் என்னை சுவாசித்து விட்டு

போ என்று

வரவேயில்லை அவள்

ரோஜாவும் வாடிவிட்டது

முள்ளும் காய்ந்துவிட்டது

என் பக்க்ங்கள் மட்டும்

அவள் விரல் பட்டு விலக இன்னும்

சத்தம் போடுங்கள்..!

சத்தம் சாதிக்கும்

சத்தமில்லா பேச்சு

மௌனத்தின் சாரம் ..

சத்தமில்லாத சமுதாயத்தில்

சம்மதம் பெற வேண்டி

"மௌனத்தை" திணிக்கும்

அரசியல் தான்

இங்கு நடக்கிறது.. !

பலவீனமான குரல்

பயன்பாட்டிற்கு உதவாது..

சத்தம் தான்

சமுதாயத்தின் அங்கீகாரம்..

சத்தியத்தின் அடையாளம்..

மௌனம் காதலுக்கு

வேண்டுமானால் வேதமாகட்டும்...

சத்தம் போட்டு

வேண்டியதை சொல்லுங்கள்

இந்த சமுதாயம் சபை ஏறட்டும் ..


Monday, November 7, 2011

என்னுயிர் தோழிக்கு .....

கை அருகில் நீ இருந்தாலும் ,
கடல்தாண்டி நீ வாழ்ந்தாலும் .
அரபுதேசம் நான் நுழைந்தாலும் ,
அமரதேசம் நான் புகுந்தாலும் .
கண்மூடி நீ நினைக்க
உன் கண்முன்னே நானிருப்பேன் ,
~உயிர் தோழன் ~என்ற உணர்ச்சியோடு!
எனை நீ நினைத்தாய் என்ற மகிழ்ச்சியோடு !


^^^^^^^^^^^^^^^^ நண்பேண்டா ^^^^^^^^^^^^^^^

கோபப்படும் பொழுது சத்தமாக பேசுவது ஏன்

இருவரும் ஒருவருக்கு ஒருவர் கோபப்படும் பொழுதோ ,
சண்டை இட்டுக்கொள்ளும் பொழுதோ  ,
, அவர்களின் இதயங்களுக்கு இடையே தூரம் அதிகமாகிவிடுகிறது. இந்த தொலைவின்
காரணமாக, ஒருவர் சொல்வது மற்றொருவரை சென்றடைய அதிக சத்தமாக
பேசவேண்டியிருக்கிறது.


எந்த அளவிற்கு கோபம் அதிகம் இருக்கிறதோ அந்த
அளவிற்கு சத்தமாக பேசவேண்டியிருக்கிறது.



அதேபோல்
ஒருவருக்கு ஒருவர் மிகுந்த அன்புடன் இருக்கும் பொழுதோ அவர்கள் பேசுவது
மற்றவர்களுக்கு கேட்பதில்லை, அவ்வளவு மென்மையாக(சப்தம் இல்லாமல்)
பேசிக்கொள்ள காரணம் இதயங்களுக்கு இடையே மிகக்குறைந்த தூரம்...




இன்னும் சொல்லப்போனால் காதலர்களின் இதயங்கள்
இணைந்தமையால் அங்கே வார்த்தை தேவையில்லை/வருவதில்லை

Friday, November 4, 2011

அம்மா.......


மாதங்கள் பத்து சுமந்து
உன் கற்பனைகளால்
என்னை செதுக்கிய சிற்பியானாய்...!!!

கருவில் என் பசி தீர்க்க
...
திகட்டும் பொழுதும்
உணவை உண்டு
என் உயிர் காத்தாய்.....!!!

பிறந்தவுடன்
மொழியில்லா என் ஆசைகளை
சிறு அசைவுதனில் புரிந்துகொண்டு
நிறைவேற்றி வைத்தாய்.....!!!

விரைவில் நான்
நடை பழக
உன் ஐ விரல் கொண்டு
என் ஒரு விரல் கோர்த்து
பல மைல்கள்
நீயும் நடந்திருப்பாய்........!!!

தலை முடியில்
விரல் வருடி
வலக்கை நீட்டி
என் தலையணை ஆக்கி
வலிகள் தாங்கி
நான் தூங்க விழித்திருப்பாய்....!!!

எனக்கு பசிக்கும் முன்னே
நீ அறிவதால்
பசியை நானோ அறிந்ததில்லை..!!!

குளநீரை கல்லெறிந்து
கலைப்பது போல்
என் தோல்விகளில்
உன் குரல் எறிந்து
என் சோகங்கள்
கலைத்து நிற்ப்பாய்...!!!

எடைதட்டில் உனை அமர்த்தி
உனக்கு சமம் பார்க்க
இவ்வுலகில் ஏதுமில்லை...!!!

இங்கு
உன்னைப்போல்
எந்த தெய்வமும் இல்லை....!!!

அம்மா.......

எந்த மனிதனும் தேடி தேடி அலைந்தாலும்
கிடைக்காத ஒரே ஒரு சிம்மாசனம்
"அம்மாவின் கருவறை தான்
அதனால் அம்மாவை நேசி "


Thursday, November 3, 2011

பொய்....

நீ நடத்திய பொய் நாடகத்தில்

நானும் ஒரு நடிகன் ஆனேன்............

உன் காதலன் என்னும் பெயரில்..........


Wednesday, November 2, 2011

சுடுபட்ட பூனை

மனிதனாயிருந்தேன்...!
ரசிகனாக்கினாள்....
கவிஞன் ஆக்கினாள்..
காதலனாக்கினாள் .. ..
கணவனாக்காமல்...ஏமாற்றினாள்..
பைத்தியமாக்கினாள்..
தெருத் தெருவாய் சுற்றித்
திரிந்தே எப்போடியோ
தெளிந்து விட்டேன் இப்போது...
இதோ இதோ இதோ
எதிரே வருகிறாள்
எனைப் பார்த்து சிரிக்கிறாள்...!
சுடுபட்ட பூனையடி...இனி
பருகத் தேவை இல்லையடி...!