Wednesday, September 14, 2011

மயக்கம் அடையவேண்டாம்

உனக்காக நான் எழுதும் இந்த பொன் காவியம் அழியாமல் உன் கண்களில் பார்த்து கொள்

தயவு கூர்ந்து அழுது விடாதே

இந்த காவியம் என் உயிர் வழி வந்தது ,
உன் விழியில் வழிந்து ஓட விடாதே அன்பே

மின் மினி பூச்சிகளை என் பேனா எழுதும் வரிசையில்
அமரவைத்து எழுதிய காவியம்

என் கண்ணீர் துளி , காகிதத்தில் விழாமல் எழுதிய என் கை விரல்கள் ,

உன் முகமே என் கண்முன்னே வந்து நின்று என்னை அனைக்கும் சுகம் கண்டேன்

என் நாவில் படாத சுவை யோ
அதில் என் கைகளுக்கு என்ன வேலை யோ
நான் எழுதும் போது அன்பே

வாழ தான் நான் நினைக்கிறேன்
என்னை போகவே நீ சொல்கிறாய்

காற்றை தான் நான் அழைக்கிறேன்
காற்று என்னை சுவாசித்திருப்பதை மறந்து

கனவுகளை நான் நேசித்தேன்
ஆனால் கனவுகள் என்னை நேசிக்கவில்லை

உலகில் உள்ள சுகமான நிகழ்வுகளை
தேடி சென்றேன் ,
அவை கூட என்னை பார்த்து
வர யோசிக்கின்றன

என்னை கொள்ளாமல் கொன்ற என் காதலிக்கு
நான் இன்னும் பணிவிடை செய்து கொண்டுயிருகிறேன்

அவளின் நினைவுகளை கொண்டு !


மனம் விசும் பூ வை தேடினேன் !
சுகம் வரும் சுவையினை நாடினேன் !
போதை இன்னும் மதுவில் ஆடினேன் !

யாரும் என்னை பார்க்க வில்லை
என்று உணர்ந்து கடவுள் ஒருவர் இருக்கிறார்,
என்று ஒருவன் உரைக்க. !

அவரை நான் வர சொன்னேன்

என் கைஎழுதுவில் உள்ள
தலை எழுத்தை மாற்ற !

கவிதை என்னும் நூலில்,
என் காதலியின் பெயர்
சொல்லாமல் ஒரு கவிதை
வரைய முயற்சித்தேன்
முடியவில்லை ,
முடிவில் அவள்
பெயர்தான் நின்றது,!

நான் சொன்னேன்,
திருமண வாழ்த்துக்கள் என்று,

அவளுக்கு தான் திருமணம்
எனக்கு இல்லையே

என் என்றால்
அவள் மனதும் ,
அவள் நினைவும்
என்னிடம் தானே உள்ளது

இருந்தாலும் இதயம் வலித்தது
காதல் தோல்வியில் ,
கடலில் முழுகாமல்
அவள் விட்டு வாசலில்
வாழை மரமாக நான் நின்றேன்
தோரணமாய் அவள் ,
திருமணத்தை பார்க்க,

கவலை இல்லை எனக்கு
அவள் சுகம் அளிப்பாள் ,
என் நினைவில்

சந்தோசமும் ! ,
துக்கமும் , !
என்னை கொல்ல முயற்சித்தன,

அவைகளை தள்ளி வைத்து ,
மறு காதல் செய்ய முயற்சித்தேன் ,
அதுவும்
தோல்வி தான் தந்தது,

என் வாழ்வில்

தெய்வம் ஓன்று இருந்தால்
எனக்கொரு காதலி தரட்டும்,

அவலாவது என்னை
மெய்யாக காதல் செய்யட்டும்,

பெண்களை நான் குறை கூர வில்லை

அவர்களின் கண்களை தான் குறை கூறுகின்றேன்
என்னை முதல் முதலாய் பார்க்க வைத்த ,
பொன் வண்டுகள் அவைகள் தானே !

நான் மண மாலையாகி உன் கணவனாக போகும் கையில் கிடந்தேன்,

அப்பொழுதாவது என்னை நீ அணிவாய என்று ஏங்கினேன் !

என்னை நீ வெறும் கவர்ச்சி பொருளாய் தான்
நீ என்னை கருதினாய்,
என்று உணர்ந்தேன் ,
வாடிய மல்லி பூ வாய் நான் போனேன்,

உன் முதல் இரவில் நான் மல்லி பூ வாய் வர மாட்டேன்

நான் நடுவில் நசங்கியும், சாக மாட்டேன்,

போனவள் ,!
போனவள் தான் !!,
வாழ்பவன் நான் !!!
ஒருவன் தான்.!!!!

என்று இந்த கண்ணில் கலந்த காதல் என்னும் கடலில் முழுகி விட்டேன்,
அவளின் பூ சிரிப்பின்
நினைவுகளோடு


அடுத்த ஜென்மம் ஓன்று இருந்தால்
நான் காதலே செய்யமாட்டேன்,

உன்னை போல் ஒருத்தியை திரும்பி
கூட பார்க்க மாட்டேன் ,

ஆனால் காதல் செய்வேன் ,
என்னை தேடி வந்த மனைவியோடு
மகிழ்ச்சியோடு
நான்
நலம்
நான்
நலம்
என்று முடியும் . மயக்கம்..

No comments:

Post a Comment