Monday, December 5, 2011

மூடிய அவள் மனக்கதவை
தட்டினேன் திறக்கவில்லை . . .

உதடாகிய சன்னல் வழி
உச்சரிப்பும் வரவில்லை
உற்று கவனித்தவனாய்
''ஈஸ்வர்'' ஸ்டைல்லில் பேசத்துவங்கினேன் . . .

''பெண்ணே பேரழகே
பேரின்ப தாமரையே
கண்ணே கனியமுதே
கற்கண்டு சக்கரையே
மணக்கும் உன்னை
மணக்க நினைக்கும்
எனக்கும் உனக்கும்
பிணக்கு எதற்கு
விளக்கு எனக்கு ''

பேரின்ப தாமரை
பேசத்துவங்கினாள் . . .
உன்போல ஒருவனுக்கு - என்
மனக்கதவு திறந்துவைத்தேன் - அவன்
திறந்த வீட்டினுள்ளே தெருநாய் புகுந்ததுபோல்
தாலி தருவதாய் சொல்லி வேலி தாண்டியவன்
விருந்தை மட்டும் முடித்துக்கொண்டு
விருந்தாளி ஆகிவிட்டான் . . .

அது முதலாய் மூடிய - என்
மனக்கதவு திறக்கவில்லை இதுவரையில் . . .
இனிமேலும் அப்படியே
ஓடிவிடு இப்பொழுதே - என்று
சொல்லியவாய் மூடுமுன்னே
சென்றது என் கால் பின்னே . . .


(முக்கிய குறிப்பு : காதல் என்ற பெயரில் ஆண்களிடம் ஏமாறும் அப்பாவி பெண்களின் விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட கவிதை)


No comments:

Post a Comment