என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Friday, May 4, 2012
பிரிவை எதிர்நோக்கும் காதல்...!
அன்று... நீ காதலை சொன்னாய்... மனதில் ஏதோ மத்தாப்பு சாரல்... இதயத்தில் தேன் மழை இனம் புரியா சந்தோஷம்... புதிதாய் பிறந்த உணர்வு... அது வரையில் உன்மேல் இருந்ந அன்பு காலப்போக்கில் காதலானது... உலகம் அழகானது... ஆனால்... நாட்கள் செல்லச் செல்ல இதயத்தில் வளரும் காதலுக்கு போட்டியாய் மனதில் பயம் வளர்கிறது... என் விழியில் கண்ணீர் துளிகளை காணாத நான் என் இதயத்தில் ரத்தம் கசிவதை உணர்கிறேன்... வாழ்க்கை இருட்டானது... நான் கேட்காமல் கடவுள் கொடுத்த பரிசு நீயும்... உன் காதலும் கையருகில் நீ இருந்தும் நமது இரு கரங்கள் இணையாதென்பது நிஜம்... நம் காதல் தோற்கையில் அதற்கு ஆயிரம் காரணங்கள் சிதறி கிடக்கும்... ஆனால், நம் காதல் ஜெயித்தால் அதற்கு ஒரே காரணம் நம் காதல் உண்மையானது...!
உன் நினைவுகள் யாரும் கொடுக்க முடியாத வேதனை... யாராலும் திருட முடியா பொக்கிஷம்...!
No comments:
Post a Comment