![]() |
Add caption |
Thursday, June 30, 2011
வாழ்வாய் நலமுடன் ...!
என்னை விட்டு -எல்லாம்
போகும் என்று -எனக்கு
தெரியும் -ஆனால்
நீயும் போவாய் என்று -நான்
நிணைக்கவில்லை....!
எனக்கு என்
வலிகளுக்கு விடை
கொடுத்தவள் நீ.....!
இன்று எனக்கும் நீ
விடை கொடுக்கும் காலம்
இருந்தும் உன் மீது -எனக்கு
துளியும் கோபமில்லை ....!
உன் நிலை நான்
அறிவேன் -உன்
மனதும் நான் அறிவேன் ..!
இப்போதும் சொல்கின்றேன் -நீ
எப்போதும் வாழ்வாய் நலமுடன் ...!
Monday, June 27, 2011
தொடரட்டும் உன் தேடல்
வழிகள் தொடர்வதானால் வழக்கை கசந்திடுமா
துளிகளை செர்துபார் ஒரு கடலை உருவாக்கலாம்
பாறைகள் எல்லாமே செதுக்காமல் சிலைகள் இல்லை
தோல்விகள் இல்லாமல் வழக்கை இனிப்பதில்லை
வெற்றி கண்டு விட்டால் உன் தேடல் முடிந்து விடும்
தோல்வி கண்டு விட்டால் உன் தேடல் தொடர்ந்து விடும்
தோல்வி கொள் தோல்வியை புரிந்து கொள் தொடரட்டும் உன் தேடல்
என்னை அழ வைத்த ஒரு புகைப்படம்
கையேந்தி நிற்கும்
ஒரு பாலகச் சிறுமி
பாத்திரம் கூட இல்லையே ...
அதற்கும் வறுமையா ? இல்லை
அதில் போடும் அளவிற்கு
அடுத்தவருக்கு வறுமையா !?
நாங்களும்
நினைத்திருந்தால்
எத்தனை பேருக்கு
நிழல் கொடுத்திருக்கலாம்
கொடுக்கத்தகுதி பெற்ற
ஒவ்வொருவனும்
பாவிதானே ......
இத்தனை நாள் கை நீட்டிய - நீ
ஒரு நாளாவது விரல் நீட்டியிருக்கலாம்
சே.....
அர்த்தங்கள் புரியாமல்
சேமிப்புக்களை மட்டும் தேடலாக்கி விட்டு...
மனச்சாட்சியை தொலைத்து விட்டோம்....
சத்தியமாய்....
அழுக்கான - உன்
பிஞ்சுக்கைகளுக்குள்
முகம் வைத்து அழ வேண்டும்.
புண்ணியத்தை
உன்னிடம்
பிச்சை கேட்க வேண்டும்
வா....
நான் திருத்தி எழுதும்
உன் எதிர்காலத்திலாவது
என் பாவம் கழுவப்படட்டும்.
Monday, June 6, 2011
அன்பு மட்டும் கற்று கொடுத்த கடவுள் !!!!
தாயே !!!
உன் அன்பை பெற்ற நான் உரைக்கின்ற
உண்மை மொழிகளிது .......
உன் அன்பை,,,
கூற வார்த்தை இல்லை என்றாலும் .....
எனக்கு தெரிந்த வார்த்தைகளையே , மீண்டும் ,
உன் பாதத்திற்கு சமர்பிக்கிறேன் ......
உலகில் வாழும் அனைவருக்கும் ,,
உறவுகள் உயிரை இருப்பதில்லை !..
ஆனால் ,
உயிரையே கொடுத்து அந்த உயிருக்காக
வாழும் உன்னத படைப்பு நீ !!!
நீ மட்டும் தான் ..........
சொந்தங்கள் பல தோன்றிடும்
இனிமையாய் சில நேரங்களில் பேசிடும் ....!
ஆனால் ... !
உண்மையிலேயே!!!!!!!
நான் பெருமையை சொல்லிகொள்ளும் ,
எனக்கு சொந்நதமான உறவு நீ மட்டும்!!!!!
என் நினைவுகள் .......
அனைத்தும் உன்னை நோக்கியே இருக்கும் ......
கடவுளின் வடிவமல்ல தாய் .......
கடவுளால் அனுப்பப்பட்ட அவள் .....
படைப்பில் பிரம்மா!!!
அன்பில் பார்வதி !!!
அறிவில் சரஸ்வதி !!
அழகில் மகாலட்சுமி !!!
என் தாயே !!!
உன்னை போற்றிட எனது இரு
கனங்கள் போதாது,
உன் அன்பால் கலந்து எனக்கு நீ ஊட்டிய உணவு ..
உன் கருணையால் உருவான ,
உன் உடலால் எனக்கு நீ போர்த்திய போர்வை !!!!
என்னை காக்க வேண்டும் என்ற காரணத்தால் .....
பூமா தேவியே பொறுமை இழக்க ,,,
பொறுமையாய் நடந்த உன் கால்கள் ......
இவை அனைத்தும் .....
அப்போதே எனக்கு புரிந்திருந்தால் ,,,,,
இந்த இருட்டான உலகில் வந்து பிறந்திருப்பேனா !!!
என் உலகமே நீதான் என்று ,
தெரியாத நிலையில் தான், இவ்வுலகை
காண பிறந்துவிட்டேன் ....
அவசர அவசரமாய் !!!
வரம் கொடுக்க கடவுள் வந்தால் கூட .......
எனக்கு கிடைத்த பெரிய வரம் ...
நீ இருக்கும் போது, வேறென்ன,
கேட்டு விடப் போகிறேன் ...
உன்னை விட பெரிய வரம் இல்லை என மகிழ்கிறேன் ....
உன் அன்பின் பயணம் முடியாத போது என் வார்த்தையின் அளவும் குறையாது !!!
என்றென்றும் எனக்காக வாழும் உன் எண்ணங்களுக்கு ......
செயல்களுக்கு ....
உணர்வுகளுக்கு ... கடமைகளுக்கு ...
நன்றி !!!! நன்றி !!!!! நன்றி !!!!!!
தமிழனாய்ப் பிறப்பதற்கே
என் இனிய தமிழ் நண்பா!
"எத்தனை தவம் செய்து,
தமிழனாய்ப் பிறந்தனை "
என்பதை அறிவாயோ?
தவப் புதல்வனே,
தரணியில் நிறையும்
அவப்பெருக்கை .....
அன்புப் பெருக்கால். பண்புப் பெருக்கால்,
அறிவுப் பெருக்கால், ஆற்றலின் பெருக்கால்,
தடயம் சிறிதும் இன்றி ....நீக்குவாய்!
ஆக்குவாய் அகிலத்தை,
அன்பிற்கு உறைவிடமாய்....
அமைதியின் பொலிவிடமாய் ......!
Sunday, June 5, 2011
எதை உன் காதல் என்கிறாய்...................
உனக்காக எல்லாம் செய்த எனக்கு
என்ன செய்தாய் என்று யோசித்தால்
வெறுமை வருகிறது பதிலாக
உயிராக நினைத்தாயா என்னை
என் காதலை கவிதையாக படித்தாயா
ஒரு முறையேனும் காத்திருந்தாயா
உறக்கம் தொலைத்து தவித்து இருக்கிறாயா
எந்த காதல் சுவடும் இல்லை
இருந்தும் காதலிக்கிறேன் என்கிறாய்
முதலில் சொல் எதை காதல் என்கிறாய்
உனக்காக நான் எதையும் எனக்காக
நீ எதையும் செய்யும் மனமே காதல்
Thursday, June 2, 2011
வாழ்க்கை என்பதென்ன?
உயிரோட்டமில்லாத
உணர்வுகளுடன்
வாழ்க்கை என்பதென்ன?
கடமைக்காய்
கல்யாணம்....!
உணர்ந்து கொள்வதற்கு
முன்னரே
உருவாகும் பிள்ளைகள்!
காதலுக்கு பயப்பிட்டேன் ......
அன்று உன்னை காதலிக்கும் போது
காதலுக்கு பயப்பிட்டேன் இன்று யாரையும்
காதலிக்க பயப்பிடுகிறேன் உன்னை
மாதிரியே இருந்து விடுவாளோ என்று...!!!
விட்டு கொடுக்கப்பட்ட உயிர்
என் வாழ்க்கை இருவிதமானது
ஆம் !!!!!!!!!
ஒன்றில் உனக்காய் கொடுக்கிறேன்.
மற்றொன்றில்
உன்னையே விட்டு கொடுக்கிறேன்.
Wednesday, June 1, 2011
நெஞ்சறுத்து போனாயே....
சிந்திய வார்த்தையில் சிதைச்சிட்ட
என் உயிரிலே விஷத்தை கலந்திட்ட
இதயத்தில் இடியை
நீ இறக்கிட்ட...
அடிக்கிற காற்றில் கரையிறேன்
அட அமிலத்தில் நானும் எரியுறேன்
நினைவிலே தினம் தினம் இறக்கிறேன்
பூவப்போல நீயும்
என் கண்ணில் வந்து போனாயே
முள்ளைப்போல இப்போ
என் கண்ணக்குத்தி கெடுத்தாயே
ஊருக்குள்ள உன்னை மட்டும்
நானும் இங்கே நம்பிருக்க
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
நெஞ்சறுத்து போனாயே!!!
மதியாதார் வாசல் !
உன்னை மதிக்காதவரை - இன்னும்
நீ மதிப்பதுதான் நல்ல இழிவு !
அறிவுரை தருவோர் ஆயிரம் - இன்னும்
அவர்கள் மட்டும் விதிவிலக்கு !
பட்டவனுக்குத்தான் வலியின் அளவு - இன்னும்
புத்தி சொல்பவன் பட்டால் தெரியும் !
மதிக்காதவரை என்றும் மிதிக்காதே - இன்னும்
மானமுள்ள மனிதர்கள் ...................
இந்த மண்ணில் இருக்கும்வரை !
மதியாதார் வாசல் மிதியாதே !!
Subscribe to:
Posts (Atom)