Friday, August 12, 2011

கண்ணீர் கதை.........

கண்களுக்கு மதகுகள்
திறந்து விட்டது யாரோ
கன்னம் வழி பாய்கிறது ....
கண்ணீரில் எத்தனை விதம்
சில நேரம் பிடிவாதத்தில்
சில நேரம் தோல்வியில்
சில நேரம் ஏமாற்றத்தில்
சில நேரம் சந்தோசத்தில்
அம்மாவிடம் அதிகம்
சாதித்து காட்டும் இந்த கண்ணீர்
பெண்கள் அழுது சாதிப்பார்கள்
ஆண்களின் குற்ற சாட்டு
பிரசவ வழியில்
அம்மா விடும் கண்ணீரில்
பிறக்கிறோம்
நமக்கு அடையாளம் கூட
கண்ணீர்
அழுத பின் தான்
நம்மை ஏற்று கொள்கிறது
மனிதனாய் பிறந்ததில்
தானாய் கற்று கொள்வது அழுகை தான்
மனித வாழ்க்கை முடிவதும் அழுகையில் தான்
அழுது தான் அனுப்பி வைக்கிறோம்
பிறக்கும் பொது அழுகிறவன்
போகிறபோது மற்றவரை
அழ வைத்து கொண்டு போகிறான்
எனக்கு ஒன்று ஆசை
எத்தனை விதமான கண்ணீர்
உலகத்தில் உண்டு என்பதை
கண்டு பிடிக்க வேண்டும்

கண்ணிரிடம் கேட்டால்
சொல்லிவிடுமா
எத்தனை கண்ணீர் என்று
அழுத பிள்ளை பால் குடிக்கும்
சொல்லி கொடுக்கும் உலகம்
முதலை கண்ணீர் வடித்து
காரியத்தை சாதித்து கொள்ளும்
சில சுய நலவாதிகலின் கண்ணீர்
அதை விட மற்றவர்களுக்காய்
வடிக்கும் புனித கண்ணீர்
காதல் செயிக்க
பெண் வடிக்கும்
போரட்ட கண்ணீர்
பிரிவு தாங்க முடியாமல்
உறவுகள் வடிக்கும் சோக கண்ணீர்

சத்தமாய் சில பேர்
மௌனமாய் சில பேர்
பொய்யாய் சில பேர்
அழுதாலும்
அழுகை ஒரு வரம் தான்

No comments:

Post a Comment